பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 129 — விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டுமென்றே பாதிரி - விடுத்த ஒரு சேதியால் விஷ மென்று கோயிலே வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்! நிலைகண்ட பாதிரி, பின் எட்டுறுப் பேயன்றி நீள் இமைகள் உதடு நாக்கு நிறைநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க நிலைக்கண்ணு டியும உண்டென . இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார்! - ஏகநாதர் மட்டும் அங்குவர வில்லையே, இனிய பாரத தேசமே!’ பக்தர்கள் மண்டையில் படிரென அடிக்கும் முத்திப் பாடல் இதுவென முழங்கலாப நகைச்சுவை யோடு நயமாய்ச் சொல்லி வகையாய்ப் புரட்சியை மனத்தினில் விளைத்தார். புரட்சிப் பாவலர் பொதுமை உணர்வினை இறுதியாய்க் கூறுவேன் இருந்து கேட்பீர்! "புதியதோர் உலகுசெய்வோம்-கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!” என்று- . . . . . . ." - - - - பொதுமை உலகம் புனைய விரும்பினர்! 'மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று இமைதிற! எழுந்து நன்ருய் எண்ணுவாய்! தோளே உயர்த்து சுடர்முகம் தூக்கு மீசையை முறுக்கி, மேலே ஏற்று விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்! நகைப்பை முழக்கு நடத்து உலகத்தை! உன்வீடு-உனது பக்கத்து வீட்டின்