பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 145 — ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் நான் சேர்ப்பேன்’ ‘செந்தமிழே உயிரே நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" -இப்படிப் பலவா றெடுத்தெடுத் துரைக்கலாம்’ அப்படி உரைக்கினும் அடிமைத் தமிழனுக் குணர்வு கொளுத்துதல் உலகினில் கடினம்! உணர்வுத் தீயினை ஊர்ஊ ராகப் பாரதி தாசனின் பாடலால் பரப்புக! வேர்.அது தமிழர்க்கு! தமிழ்க்கது விளைவே!