உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பகுத்தறிவாளர் கழகம் வேலூர் வ. ஆ. (கடந்த விடை 2 (15-5-77) அன்று பகுத்தறிவாளர்கள் சார்பில் வேலூர் நகர மன்ற அரங்கில் நடைபெற்ற பாவேந்தர் பிறந்த நாள் விழாப் பாட்டரங்கத்தின் தலைமையுரை) முன்னுரை பேரன்பு மிக்கவரே! பெரியோரே! எம்மைப் பெற்றதமிழ்த் தாய்க்குலமே! இளைஞர்களே! வணக்கம். சேரளுெடு சோழனும் நற் பாண்டியனும் சேர்த்துச் செந்தமிழை வளர்த்தகதை பழங்கதையாய்ப் போக, வீரமிலா தன்புமிலா தார்வமும்இல் லாது வீண்பகட்டுக் காரர்களாய் நாம்வாழும் போதில், "யாரவன்காண் எந்தமிழைப் பழித்தவன்"என் ருெருவன் இடிக்குரவின் வினவெழுப்பி எழுகளிருய் வந்தான்! இராவணனைச் சாய்த்தஇனம்-எந்தமிழ்மா வீரன் இரணியன ஒழித்தகுலம்-ஏற்றமிகு நூலால் பராவியரும் முன்னேர்கள் வளர்த்திமைபோல் காத்த பசுந்தமிழைத் தாழ்த்தியதோர் பழிவடவக் கூட்டம்விராவியநம் பெருமை யெலாம் அடிவெட்டி வீழ்த்த வீணர்குலம் - நம்நாட்டை வளைத்தழித்த பின்னத் திராவிடர்நம் திருநாட்டை மீட்பதற்கிங் கொருவ்ன் தெள்ளுதமிழ்ப் பாப்பாடி உயிர்த்தெழுந்து வந்தான்! 2. இன்னலிலே நாம்துயின்ற இழிவுநிலை கண்டே எழுந்திடுக தமிழினமே தமிழினமே என்று மின்னலிலே உயிர்கிளர்ந்து மேனியெல்லாம் பாயும் மெட்டெடுத்தே உளம்புதுக்கும் உயிர்ப்பாட்டைப்பாடிக்