பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 147 — கன்னலிலே தமிழ்பிசைந்து காதினிக்கக் கூவிக் கருத்துாட்டி உணர்வூட்டித் தமிழ்மறமும் ஊட்டித் தென்னவரின் கும்பிவிட்ட தோள்களிலே வீரம் தெறித்தொளிரச் செய்யவொரு தீம்புலவன் வந்தான்! பாழெடுத்த சொற்களிலே பைந்தமிழைக் கொல்லும் பச்சைவெறிப் பாடல்களைப் பாடும்தரிக் கூட்டம் காழெடுத்த ஒசையிலே காதறுந்து நின்ற காலத்தில்-நேரத்தில்-ஈங்கொருவன் தோன்றிச் சீழெடுத்த வரலாற்றைப் புதுப்பிக்க எண்ணிச் செந்தமிழிற் சொல்லெடுத்துத் தேனினிமை சேர்த்தே யாழெடுத்துப் பாட்டிசைத்தான் அவன்புகழைப் பாட யாப்பொன்று போதாது; பாத்தோப்பே வேண்டும் 4 பூவேந்தி மணியேந்திப் பொலிவேந்தி இளமை பூரிக்கும் மார்பேந்திக் கிளிமொழியும் தோற்கும் நாவேந்தி இளாகின நடையேந்திக் கலையின் நலனேந்தி நச்சரவம் பெண்களின்பேர் ஏந்தி மூவேந்தைச் சாய்த்(து).அவர்பால் ஆரியத்தை ஊன்றி முன்னிருந்த தமிழ்க்குலத்தின் சீர்சாய்த்த பின்னைப் பாவேந்தாய் அக்குலத்தைக் காத்திடற்கு வந்தான்! பாரதிதா சன் அவன்பேர்! பாவுலக வேந்தன்! 岳

  • ஆரியர்பால் ஆங்கிலர்பால் வேற்றினத்தார் பலர்பால்

அழகுதமிழ் சிக்கியதன் சொல்திரிந்து பொருளும் பூரியர்தம் வடமொழியால் உட்சிதைந்து பலவாய்ப் புல்லுருவம் கொண்டுநமின் உள்ளுணர்வும் போக்கி நேரியலா மறைமுகமாய் இனமழியும் போதில் நெட்டுயிர்த்துத் தமிழரெலாம் தத்தளிக்கும் நாளில் சீரியசெம் பாவிசைத்தே இனம்புதுக்க வந்தான்! - . . . செந்தமிழ்ப ரதிதாசப் பாவேந்தன் என்பான்