உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 154 — "குறத்தியர் கவண்எ டுத்துக் குறிபார்க்கும் விழி,நீ லப்பூ! எறியும்கை செங்காந் தட்பூ உடுக்கைதான் எழில் இடுப்பே! நீரையவன் காட்டுகின்ருன்! அந்நீரில் மேயும் நெளிவை அவன் காட்டு கின்ருன்! அருவியதும் பாரீர்! 'பெருஞ்சிங்கம் அறைய வீழும் யானைபோல் பெருகிப் பாய்ந்து, வரும் - வெள்ளம்!” "இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச் சரிவுகள்! நுரையோ முத்துத் தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி மரகத வீச்சு நீரில் மிதக்கின்ற மரங்க ளின்மேல் ஒருநாரை வெண்டா ழம்பூ"

  • அருவிகள் வயிரத் தொங்கல்!

அடர்கொடி பச்சைப் பட்டே! குருவிகள் தங்கக் கட்டி! குளிர்மலர்: மணியின் குப்பை' நீரினுள்ளே கதிர்நுழைந்து நெளிவதைச்சொல் கின்றன்! நீங்களுந்தாம் பார்த்திருப்பீர்! நினைவுவந்த துண்டா?

பின்னிய ஆடை காற்றில்

பெயர்ந்தாடி அசைவ தைப்போல் நன்னீரில் கதிர்க லந்து நளிர்கடல் நெளிதல் கண்டேன்! வேரினுள்ளே தமிழ்பாய்ந்தால், தமிழெருவைப் போட்டால் விளைவெல்லாம் தமிழ்ப்பாதான்! வேறென்ன - - . தோன்றும்? 24