பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 155 — தோற்றுகதிர் கடல்மிசையில் எழுந்ததுவும் தங்கத் தூறல்வந்து விழுந்ததென்பான் ஒளிவெளியாம் என்பான்! மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெந்துநீ ருகாமல் இருத்தல்வியப் பென்பான்! ஏற்றுகின்ற உவகையெல்லாம் இயற்கையினைக் காண்டான்! எடுத்துக்காட் டங்கொன்றும் இங்கொன்று மாக! போற்றுங்கள் கேட்டுவிட்டுச் சிறந்திருந்தால் அன்றேல் புலவன் எவன், மற்றவனைக் காட்டிவிட்டுப் போங்கள்! 'உரித்ததற் ருழம் பூவின் - நறும்பொடி உதிர்ந்த தைப்போல், பெருமணல்' “முதலைகள் கிடப்பதைப் போல் சின்னதும் பெரிதுமான வெடிப்புகள்' "கீரியின் உடல்வண் ணம்போல் மணல் மெத்தை' 'காலுக்குப் புன்னையிலே போலும் செருப்பு’ வெண்தா மரையில் விளையாடும் வண்டுபோல் கண்தான் பெயர,நீ என்ன கருதுகின்ருய்? தாலாட்டு புன்னே மலர்க்காம்பு போன்றதோர் சிற்றடிப் புரு: கிளிக் கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை' பொரியலோ பூனைக் கண் போல் பொலிந்திடும்: 'கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட மருத்து விச்சி . . 'காட்டுமுயற் காதிலையும் களியானத் துதிக்கை அடிமரமும் வானில் . . நீட்டுகிளை கொய்யா? - ஒடுபிளந்தசெம் மாதுளைபோல் உதடு: 'காதோரத்து வண்டுவழி: