உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 157 — செப்படியாட் டப்புலவன் பாவேந்தன் அல்லன்! சீர்த்தி, அறம், செழுமையொடும் இயற்கைபுனை மேலோன்! மப்படிக்கே மயிலாடல் உண்மையதாம் என்ருல், மனங்களிக்கப் பாவேந்தன் பாடியதும் உண்மை!’ 26 ஒன்றுரைப்பேன் நீங்களதை உணர்ந்துகொளல் வேண்டும்! உலகமெலாம் அலைந்தாலும் இப்புதுமை காணிர்! துன்றிருளும் தூங்குகின்ற இடங்காட்டு வீரா? தோது.பல ஆய்ந்தாலும் தோற்றுத்தான் போவீர்! இன்றன்ரும்: இனியன்ரும்; எந்நாளும் இதுபோல் எப்புலவ னும்காட்டான் இயற்கைசெயும் கூத்தை! ஒன்றன்மேல் ஒன்றடுக்குந் தாமரைப்பூ விதழ்க்குள் உறங்குகின்ற இருளை எவன் காட்டிவிட்டுப் போனன்? 27 பாடலினக் கேளுங்கள்; அடுக்கிதழ்த்தா மரைப்பூ இதழ்தோறும் அடிப்புறத்தில் படுத்திருப்பாய் நீதான்” ஒடவிழ்க்க வெளிப்படுமோர் ஒளிமுத்தம் போல இயற்கையின துண்மையெலாம் கண்டுகண்டே உரைத்தான்! தேடரிதாம் சொற்களெலாம் பாவேந்தன் உள்ளம் தேடிவந்து குடிபுகுந்து தேவைவரும் போதில் மூடரிதாம் வாயில்வழி தூவல்வழி யாக மூண்டுவரும் பாட்டாகப் பாரதிதா சற்கே! 2. இனம் இயற்கையினை ஒருவாருய் ஈங்கெடுத்துச் சொன்னேன்! இனம்பற்றிக் கூறுமவன் கருத்துநலன் கேட்பீர்! செயற்கையிலாப் புலவனவன்! செந்தமிழ்த்தேன் ஊற்று! செப்புகின்ருன் கேளுங்கள்! எண்ணுங்கள் இதனை! "தமிழர்நாம் என்ருல் நம்பால் தமிழ்உண்டா? ஒழுக்கம் உண்டா? அமைவுறச் சிறிது முண்டா? அன்றைய மறத்த னந்தான்