பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 160 — இன்பத்தில் துரங்கிடலாம்! இன்னல்களுக் கிடையில் என்தமிழ மக்கள்துயில் கின்றனரே என்ருன்! துன்பத்தில் தூங்குபவன் நோயாளி, பேதை! ‘துயின்றிருந்தார் என்தமிழ மக்க"ளெனும் கூற்றில் என்புதுமை காட்டுகின்ருன்? தெரிந்தீரா? மற்ற இனமக்கள் எல்லாரும் விழித்திருக்கின் ருராம்! என்மக்கள் மட்டும்துயில் கின்ருர்’ என் கின்ருன்! இதேைல கழிவிரக்கம் கொள்கின்ருன் நம்மேல்! 33 நம்மினத்தை அன்னவன்போல் விழிக்கவைக்கும் முயற்சி நாளைவரை எப்புலவன் தமிழகத்தில் செய்தான்! வெம்மனத்தைக் கொண்டுள்ளோம்! வீண்வாழ்க்கை வாழ்வோம்! விடியாத மூஞ்சிகளாய்த் துரங்குகின்ருேம் இன்னும்! அம்மணமாய் நம்முன்னர் அலைந்தவர்கள் எல்லாம் அழகழகாய் உடையுடுத்தே உலகஉலாப் போந்தார்! கும்மிருளில் குருட்டாட்டம் போடுகின்ருேம் ஐயோ! 'கும்பிக்குச் சோறு"என்ருல் தாயினைவிற் கின்ருேம் 34 சீர்திருத்தம் அடுத்தபடி பாவேந்தன் சீர்திருத்தம் சொல்வான்! அத்தனையும் நாம் கேட்டோம்; கேட்டுநடந் தோமா? உடுத்தபடி உண்டபடி உறங்கியுறங் கியராய் உயிர்த்துயிர்த்துச் சாகின்ருேம் உருப்படியாய் . . வாழோம்! மடுத்திடுவீர் பெண்கள்நலம் பேசுகின்ருன்; நாமும் மாரடித்துப் படிக்கின்ருேம்; நொண்டி நொண்டி . நடப்போம்! கொடுத்தாலும் வாங்குகிலோம்; கொண்டாலும் - - . காக்கோம்! குலம்பிழைக்கப் பெண்களை நாம் வாழவைப்போம், - - - கேட்பீர் 35