பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 161 — 'இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின் இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களைஆ டவர்கள் எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும் தாய்மையினே இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா? செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல் செயற்பால தாயினுமே முதன்மைஎனக் கொண்டே அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால் அமைதியுல குண்டாகும்!-பாவேந்தன் சொல்வான்! பெண்டாட்டி என்று பெயரடைந்த நாள்முதலே ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருடாதி உண்டுரிமை: தன் மனைவி செத்தால்தான் வேறுமணம் தான்செயலாம்! இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம்’ "ஆணுயர் வென்பதும் பெண்ணுயர் வென்பதும் நீணலத் தெங்கணும் இல்லை - தீண்டாமை பற்றியெல்லாம் மிகத் தெளிவாய்ச் சொன்னன், திராவிடர்தம் இனத்தலைவர் நம்பெரியார் சொன்ன வேண்டாமைப் பட்டியல்கள் அனைத்தையுமே பாட்டாய் ஆரியர்கள் வெலவெலக்க ஆக்கியவன் தந்தான்! ‘தீண்டாதார் எனுமவரும் பிறரும்ஒர் தாயின் திருவயிற்றில் வந்தவரன் றோ?' என்றே கேட்டான்! ஈண்டெல்லாம் பெருச்சாளி கோயில்துழை கையிலே இவர்க்குமட்டும் கோயில்விலக் கேனென்ருர்ப் பரித்தான்! 35 நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி நேரில்அக் கோயிலிலே-கண்டும் - ஒத்தபிறப்பின ரைமறுத் தீர்உங்கள் கோயிலின் வாயிலிலே!" ஏகபரம் பொருள் என்பதை நோக்க எல்லாரும் உடன் பிறப்பே.-ஒரு பாகத்தார் நீண்டப் படாதவர் என்பதி லே,உள்ள தோ சிறப்பே'