பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 162 — 'இந்த உலகில் எண்ணிலா மதங்கள் கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள் சாதிக்குச் சாவுமனி அடிக்க’ சாதியொழிப் பதும்தமிழை வளர்ப்பதுமே நம்மோர் செயவேண்டும் சீர்திருத்தம் எனத்தெளிவாய்ச் சொன்னன். 37.1 ‘சாதி ஒழித்திடல் ஒன்று-நல்ல தமிழ் வளாத் தல்மற் ருென்று! பாதியை நாடு மறந்தால்-மற்றப் பாதி துலங்குவ தில்லை.” சாதியொழி யாதஒரு மக்களினந் தன்னில் சரிநிகர்த்த வாழ்வெங்ங்ன் அமைந்துவிடும்-என்ருன். ‘சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர் அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்? சமயம் சாதி தவிர்தல் எந்நாள்? ‘என்றுதான் சுகப்படுவதோ?-நம்மில் யாவரும் சமானம் என்ற நன்னிலை யில்லை-அந்தோ ஒன்றுதான் இம் மானிடச் சாதி-இதில் உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ’ சாதியொழி யாநிலையில் குடியரசால் என்ன சாய்த்துவிடப் போகின்ருேம்? சட்டங்கள் வேண்டும்: மீதிவகைத் திருத்தமெனப் பட்டியல்கள் சொல்வான்! மேம்பட்ட புலவனவன் பாடுவது கேட்பீர்! ვ7• "நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள் நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்! காட்டோமே சாதிமணம் கலப்புமணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி கட்டாயக் கல்வி