பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 163 — ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே: உழையான நோயாளி ஊர்திருடி என்போம்! கேட்டையினி விலைகொடுத்து வாங்கோமே, சாதி கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே'! 'ஒருகடவுள் உண்டென்போம்; உருவணக்கம் ஒப்போம்: உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்; திருக்கோயில் தொழிற்சாலை’ என்றவனும் சொல்வான்! தீமைதரும் தொல்லைகளை உடன்மாற்றக் கேட்டான். திருமணத்தும் சீர்திருத்தம் வேண்டுமென்று சொல்லித் 'திராவிடர்க்குப் புரட்சியான திட்ட”மொன்று தந்தான் ஒருமணத்தை ஆதரித்தான் மறுமணத்தை ஏற்ருன். உயர்காதல் போற்றுதற்குக் கருத்தடையை ஏற்ருன், "காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்! இதிலென்ன குற்றம்? சாதலுக்கோ பிள்ளை?அன்று தவிப்பதற்கோ என்று சாட்டையடி யாய்க்கேட்டான் பல்லாண்டு முன்பே, தீதில்லாப் பொதுவுடைமை வேண்டுமெனச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்களே உலகறிய வேண்டும் 39.1.ஐ புதியதோர் உலகுசெய் வோம்-கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!” ‘எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான இடம்நோக்கி நடக்கின்ற தித்த வையம்' ‘எல்லார்க்கும் தேசம்! எல்லார்க்கும் - - உடைமையெலாம்! எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!" கோதில்லா நெஞ்சத்தின் உயர்கருத்தாம் இவற்றைக் கோணல்உல கம்ஏற்று, நிலைநிமிரல் வேண்டும், 39.4