பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் புலவன், தானே ஓர் இலக்கியமாகவும் இருக்கிருன் என்பதற்குப் பாவேந்தரே ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. நேருடல் இல்லாத மனம்; கரடு முருடில்லாத அவரின் பழகுந் தன்மை; எடுப்பார் கைப் பிள்ளையாகி விடுகின்ற அவரின் குழந்தைமை; கள்ளங் கவடற்ற அவரின் நிலாச் சிரிப்பு, தென்றலாகவும் புயலாகவும் மாறி மாறி வீசும் அவரின் சொல்வீச்சுகள்; அடிக்கடி சிணுங்கிக் கொள்ளும், வஞ்சகமற்ற அவரின் பழகு முறைகள்; நெருப்பை அள்ளிக் கொட்டும் அவரின் மேடைப் பேச்சு; அனைவரிடமும் குழைந்து பழகும் அவரின் தூய்மையான, தண்ணென்னும், அன்புணர்வு - இவை அனைத்தும் தனித்தனி இலக்கியங்கள் அவரிடம் பழகிய அவ்வைந்தாண்டுகள், என் வாழ்க்கை வர லாற்றின் இளவேனிற்காலம் இனிய இளங்காலைப் பொழுது! ஆ. அதன் இன்பச் சிலிர்சிலிப்புதான் என்னே! என் மூத்த மகள் பொற்கொடி தன் இரண்டாம் அகவைப் பொழுது, அவ்ர் மடியில் குந்தி விளையாடிய அந்த அரைமணிப் பொழுது, அவள் பிற்காலத்துத்தன் கணவனேடாடிய இன்பத்தினும் மேம்பட்டது! காணற் கரிய அக் காட்சியை இன்றும் என் மனக் கண்ணுல் கண்டு குளிர்ச்சியடைகின்றேன். பாவேந்தரைப் பற்றி இதுவரை நான் எழுதி வெளி வந்த எழுத்தோவியங்களின் தொகுப்பு இது. இன்னும் அவரைப் பற்றி, அவரின் பாடல் திறங்களைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண் டிருக்கின்றேன். நேரந்தான் கிடைக்க வேண்டும். ஒய்வு கிடைப்பின் எழுதுவேன். - இதனை முறைப்படுத்தி அச்சிட்டு வெளிப்படுத்தி யதில், என் இரண்டாம் மருகர், சொல்லாய்வறிஞர் திரு. ப. அருளி அவர்களுக்கும், என் இரண்டாம் மகன் திரு. மா. பொழிலன் அவர்களுக்கும் நிறைய பங்குண்டு: அவர்கள் இருவர்க்கும் என் அன்பு வாழ்த்துகள்! N 20-4-284