பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 / புத்தரின் வரலாறு

விசாகை

அநாத பிண்டிகன் என்னும் செல்வச் சீமானுக்கு விசாகை என்னும் பெயருள்ள குமாரத்தி ஒருத்தியிருந்தாள். அங்க நாட்டில் பெருஞ் செல்வனாகிய மிகாரர் என்னும் பிரபுவுக்குப் புண்ணியவர்த்தனன் என்னும் குமாரன் இருந்தான். புண்ணியவர்த்தனக் குமாரனுக்கு விசாகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். விசாகை, கணவன் வீடு வந்து சேர்ந்தாள்.

விசாகையினுடைய மாமனார் நிர்க்கந்த மதத்தைச் சேர்ந்தவர். விசாகையோ பகவன் புத்தரை வழிபட்டு அவரது அறநெறிப்படி நடக்கிறவள். விசாகையின் மாமனார், விசாகையை நிர்க்கந்த மதத்தில் சேரும்படி பல இன்னல்களைச் செய்தார். ஆனால், விசாகை, பகவன் புத்தரையே வழிபட்டு வந்தாள். அன்றியும் தனது மாமியார் முதலியவர்களுக்கும் அந்நகரத்துப் பெண்களுக்கும் பசுவன்புத்தர் மீது பக்தி உண்டாகும்படிச் செய்தாள். அவர்கள் எல்லோரும்பகவன் புத்தரைக் கண்டு அவரது அறநெறியைக் கேட்க விருப்பங்கொண்டனர்.

இதனை ஞானதிருஷ்டியினால் அறிந்த பகவன் புத்தர் தமது சீடர்களுடன்அங்கநாடு சென்று விசாகையின் வீட்டுக்குச் சென்றார். விசாரகை பகவரை வரவேற்று உணவு கொடுத்து அறநெறி கேட்டாள். அதனைக் கேட்ட உற்றார் உறவினரும் ஏனையோரும் மனம் மகிழ்ந்து பௌத்தராயினர். மறைந்திருந்து புத்தரின் அறமொழியைக் கேட்டுக்கொண்டிருந்த மாமனாரும் புத்தரை வணங்கி பௌத்தரானார். விசாகை பேரன் பேத்திகளோடு நெடுங்காலம் வாழ்ந்து பகவன் புத்தருக்கும் புத்த சங்கத்துக்கும் பெரும் பொருளைத் தானம் வழங்கினாள். பின்னர், துறவு பூண்டு பிக்குணியாகி இறுதியில் மோக்ஷம் அடைந்தாள்.

தேவதத்தன்

பகவன் புத்தருக்கு எழுபத்திரண்டு வயதாயிற்று. ததாகதருக்கு நாடெங்கும் பேரும் புகழும்மதிப்பும் ஏற்பட்டது. பௌத்த சங்கத்தை மக்கள் மதித்துப் போற்றினார்கள். புத்தருடைய உறவினனும் அவரிடம் துறவு பூண்டு பிக்கு சங்கத்தில் இருப்பவனுமாகிய தேவதத்தனுக்குப்பதவி ஆசை ஏற்பட்டது. பகவன் புத்தருக்குப் பதிலாகத் தானே பெளத்த சங்கத்தின் குருவாக இருந்து பெருமையடைய வேண்டும் என்று அவன் பெரிதும் விரும்பினான்.