பக்கம்:மேனகா 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

141

உடனே ஐந்து நிமிஷத்தில் துயில் வந்து அவரை அழுத்தியது. என்றாலும், அவர் மிகவும் வருந்திச் சமாளித்துக் கொண்டு, துயிலாமல் அன்றிரவு முற்றிலும் அவ்வாறே கண்விழித்து இருக்க வேண்டு மென்று உறுதி செய்து கொண்டிருந்தார். அவ்வாறு கால் நாழிகை கழிந்தது. அப்போது ஒரு பெண்பிள்ளை ஒரு சிறிய மூட்டையை எடுத்துக்கொண்டு அங்கு வந்து, சாம்பசிவத்தின் காலடிக் கருகில் உட்கார்ந்து வெற்றிலைபாக்குப் போட்டுக் கொண்ட வண்ணம், “சாமி! கூடுவாஞ்சேரிக்கு வண்டி எப்ப வரும்?” என்றாள். சாம்பசிவம் “விடியற்காலையில் வரும்” என்றார். அவள் வெற்றிலைப் பாக்கைப்போட்டுக்கொண்டு அவரது காலடிக்கருகில் படுத்துக்கொண்டாள். அதன் பிறகு கால்நாழிகை கழிந்தது. அவள் அந்த ஊரையே பெயர்த்தெறியும் படியான குறட்டைகளை தன் நாசிகளின் வழியாக வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது பிரயாணியைப் போலக் காணப்பட்ட ஒருவன் அங்கு வந்து, சாம்ப சிவத்தினருகில் வலப்பக்கமாக உட்கார்ந்து பட்டாணிக்கடலை தின்ன ஆரம்பித்தான். அவன் அந்த வேலையை கால் நாழிகை வரையில் செய்துவிட்டு அவரது தலைப்பக்கத்தில் இரண்டு முழத்திற்கப்பால் படுத்துக்கொண்டு பாட்டுப் பாட ஆரம்பித்தான். தேவாரம், திருப்புகழ், இந்துஸ்தானி, கெஜல் முதலிய பாட்டுகளை ஒரு நாழிகை நேரம் பாடிய பின் அவன் கடைசியில் ஒய்ந்து போய் குறட்டை விடத்தொடங்கினான்.

அப்போது இரவு மணி ஒன்றாயிற்று; சாம்பசிவம் மூன்றாம் ஜாமம் நித்திரையிலாழ்ந்திருந்தார். பட்டினியாலும், நெடுநாட்கள் துயிலாமையாலும், அலட்டலினாலும், அயர்ந்திருந்த மனிதராதலின், அவர் ஆழ்ந்த நித்திரையில் பிரம்மாநந்தமாக அழுந்திக் கிடந்தார். ஆனால், அவர் துயிலுவதாக எவருக்கும் தெரியவில்லை. அவரது ஆழ்ந்ததுயில் சிறுகக் சிறுகக் கலைய வாரம்பித்தது. அரைத்துயிலும் அரை உணர்வுமாக விருந்தது. அப்போது வலது உள்ளங்காலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/142&oldid=1252024" இலிருந்து மீள்விக்கப்பட்டது