பக்கம்:மேனகா 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

21

மெல்லாம் போய்விட்டது! நாளைக்குக் காலையிலேதான் எதையும் நிச்சயமாகச் சொல்லக் கூடும். அதிருக்கட்டும். இந்தப் பெண்ணின் உடம்பு இவ்வளவு படபடத்திருப்பதன் காரணமென்ன? நான் சொன்னபடி கடற்காற்றிற்கு அழைத்துப் போனாயா?

நூர்:- ஆம்! அழைத்துப்போனேன். அதனால் உடம்பு சிறிது தெளிவடைந்தது. ஆனால் நீங்கள் இப்போது குறித்த விபத்தை நாங்கள் நேரில் கண்டோம். அங்கே ஒடிய இரத்த வெள்ளத்தைக் கண்டு மேனகா மூர்ச்சித்து விட்டாள். இங்கே வந்தவுடன் மருந்தை உபயோகித்தேன். இப்போது சிறிது குணமாயிருந்தாலும் அந்தப் படபடப்பு மாத்திரம் இன்னமிருக்கிறது. இதனால் ஏதாவது துன்பம் சம்பவிக்குமோ வென்று உங்களை சிறிது முன்னாகவே வரவழைக்க வெண்ணி வண்டி யனுப்பினேன்.

துரை:- அப்படியானால் அந்த மனிதரின் மேல் ஏறிய வண்டி யாருடைய தென்பது உங்களுக்குத் தெரிந்ததா.

நூர்:- இல்லை. அந்த வண்டி மிகவும் வேகமாய்ப் போய் விட்டது. நாங்களும் உடனே வந்து விட்டோம்.

அப்போது துரைஸானி தனது கையிலிருந்த ஒரு மருந்தை மேனகாவின் இமையில் தடவிவிட்டு, “மேனகா! மேனகா!” வென்று இரண்டு முறை கூப்பிட, அவள் உடனே தனது கண்களைத் திறந்து கொண்டு மெல்ல, “ஏன்” என்றாள்.

துரை:- ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாயா ? - என்றாள்.

மேனகா மெதுவாக, “இல்லை” என்றாள்.

துரைஸானி, “இனிமேல் ஆகாரம் சாப்பிடாமல் இருப்பது பிசகு, வெறும் பாலாகிலும் கொஞ்சம் சாப்பிடத்தான் வேண்டும்; ஆகாரமில்லாமலேயே இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/23&oldid=1251487" இலிருந்து மீள்விக்கப்பட்டது