பக்கம்:மேனகா 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

71

கடைத்தெரு வந்தது. சாமாவையர் வண்டியை அவ்விடத்தில் நிறுத்தச் செய்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கடைகளில் புகுந்து மிட்டாய்கள், பட்சணங்கள், தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் முதலியவற்றை வாங்கிவந்து வண்டியில் நிரப்பினார். உடனே வண்டி புறப்பட்டு ஒரு மயிலுக்கப்பால் இருந்த அவளுடைய வீட்டை நோக்கிச் சென்றது. வண்டியில் விளக்கிருந்தமையாலும், வண்டிக்காரன் அருகிலிருந்த மையாலும், சாமாவையர் வண்டியில் எவ்வித விஷமமும் செய்யாமல், வீட்டின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.

சில நிமிஷங்களில் வண்டி அவளது வீட்டின் வாசலில் வந்து நின்றது. ஐயரும், அம்மாளும் கீழே இறங்கினார்கள். கமலம் உடனே கதவை இடிக்க, சிறிது நேரத்தில் ஒரு கிழவி கதவைத் திறந்தாள். கமலம் வண்டிக்காரனைப்பா ர்த்து, “அடே சாமானை உள்ளே கொண்டு போய் வை” என்றாள். அவன் அப்படியே செய்துவிட்டுத் தனது கூலியைப் பெற்றுக்கொண்டு சென்றான். உடனே மங்கை, “வாருங்கள் உள்ளே போகலாம்” என்று மரியாதையாக உபசரித்து உட்புறம் அழைத்துச் சென்றாள். மிகவும் ஆடம்பரமாக வந்திருந்த ஐயரவர்களைக் கண்டவுடன் கிழவியின் தூக்கமும் கலக்கமும் பறந்தன. அவள் இரகசியமாகப் பெண்ணைக் கடைக்கணித்தாள். பெண் தனது கண் சிமிட்டலால் தந்தி பேசினாள். உடனே கிழவியும் மிகுந்த வணக்கமும், அன்பும், மகிழ்ச்சியும் காட்டி, அந்த வரவேற்பில் கமலத்தோடு கலந்துகொண்டு, “சுவாமி! உள்ளே வாருங்கள்” என்று அழைத்தாள். அவளது அன்பைக் கண்டு பெரிதும் உவகை கொண்ட சாமாவையர் மகாராஜன் உலாவ எழுந்த தைப்போல ஆடி அசைந்து பொன்னடி பெயர்த்து உட்புறத்தில் நுழைந்தார்.

மூவரும் கூடத்திற்குச் சென்றனர்; அந்த வீடு மிகவும் வசதியான பெருத்த மச்சுவீடு; கூடம், தாழ்வாரம், முற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/72&oldid=1251909" இலிருந்து மீள்விக்கப்பட்டது