பக்கம்:மேனகா 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

73

இருப்பார்கள்; பொழுதுவிடிந்தால் புது மனிதராக மாறிப்போய்விடுவார்கள். நீ தாசி என்பதை இவன் அறிந்தால் 20-ரூபா அல்லது 25 - ரூபா கொடுப்பான். அல்லது குடும்ப ஸ்திரீ என்று பாசாங்கு செய்தால் ரூபா 100- அல்லது 200- க்கு மேல் பெயராது. அதனால் நம்முடைய தரித்திரம் விடிந்து போகாது. குட்டுப்பட்டால் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். மூட்டையை அப்படியே அடித்து விட்டால், ஆயிசுக் காலமெல்லாம் சுகப்பட்டுப் போகலாம்.

கமலம்:- (சிறிது அச்சமடைந்து) அது எப்படி முடியும்? நாம் வீணாக ஜெயிலுக்குத்தான் போய்ச் சேரவேண்டும்; ஏதோ வந்ததைக் காப்பாற்றுவோம்; நாமென்ன கொடுத்தா வைத்தோம்; அவனை நான் நன்றாக மயக்கி, அவன் இங்கேயே நாலைந்து நாள்களாகிலும் இருக்கும்படிச் செய்து ஆயிரம் ரூபாய் வரையில் பிடுங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறேன்.

கிழவி:- முட்டாளே போ; உனக்கு என்ன தெரியும்? சின்னப்பயலைக் கண்டால் சிறுக்கிக்கும் ஆசைதான் என்பதைப் போல உனக்கும் கொஞ்சம் சபலம் உண்டாகிறதோ? பதில் பேசாமல் நான் சொல்வதைச் செய். நம்முடைய கலியே நீங்கிப்போகும். போய் அவன் சந்தோஷமடையும் படி பேசிக்கொண்டிரு. நான் பால் வாங்கிக்கொண்டு வரப்போன தாகச் சொல்லிவை. நான் கொல்லை வழியாக நம்முடைய கள்ளு குடிக்கி வீரபத்திரனிடம் போய் இதற்குத் தகுந்த ஏற்பாடுகளுடன் சீக்கிரம் வருகிறேன்.

கமலம்:- (சிறிது யோசனை செய்து) சரி; உன்னுடைய இஷ்டம்போலச் செய்; நான் அவனிடம் போகிறேன் என்றாள்.

உடனே கிழவி ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கமாக வெளியிற் போய்விட்டாள். கொல்லைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/74&oldid=1251911" இலிருந்து மீள்விக்கப்பட்டது