உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வாழையடி வாழை

பாலும் இஃது ஆண்களையே தாக்கும். நிறக்குருடு என்பது என்ன? இங்நோயுள்ளவர்கள் செந்நிறத்தையும் பச்சை நிறத்தையும் பாகு படுத்தி அறியமுடியாது. இக் குறையுள்ளவர்கள் விமானப்படை களில் பணியாற்ற முடியாது. இதன் காரணமாகவே இரண்டாம் உலகப் பெரும்போரில் இக் குறையுள்ளவர்கள் இப் படையில் சேர்த்துக் கொள்ளப பெறவில்லை என்பது நினைவுகூர்தற்பாலது.

இது செயற்படும்முறை ஹெமா. பீலியா செயற்படுவதைப் போன்றதே. நிறக்குருடுககுக் காரணமான ஜீன் X-நிறக்கோலில் உள்ளது. ஆணிடம அமையும் X-நிறக்கோலில் இந்த ஜீன் இருப்பின் அவன் கிறக்குருடனாக இருப்பான். இந்த X-நிறக் கோல் தாய்வழியாக வந்தது என்பதை நாம் அறிவோமாதலின், ஹெமோ..பீலியாவைப போலவே இங்கிறக்குருடையும் தாய்வழி யாகவேபெறுகின்றான் என்பது தெளிவாகின்றது.

ஒரு பெண்ணிடமுள்ள ஒரு X-நிறக்கோலில் நிறக்குருட் டிற்குக் காரணமான ஜீன் அமைந்து மற்றொரு X-நிறககோல் சாதாரணமாக இருப்பின் இவளுக்குப் பிறக்கும் ஆண்குழவி களில் இரண்டிற்கு ஒன்று நிறக்குருடாக இருக்கும். ஆனால், இவளிடம் இரண்டு X-நிறக்கோல்களிலும் இரண்டு குறை தரும் ஜீன்கள் அமைந்து இவள் கிறக்குருடாக இருந்தால் (200 பெண் களில் ஒருவர் இம்மாதிரி இருப்பர்) இவளுடைய ஒவ்வோர் ஆண் குழவிகளிடமும் இந் நிறக்குருடு அமைந்துவிடும் என்பது உறுதி.

இவளுடைய பெண்குழவிகளின் நிலை என்ன? தந்தை நிறக் குருடனாகவும் தாய் அஃது உண்டாதற்குக் காரணமான ஜீனின் ஊர்தியாக இருந்தாலும், அல்லது இவளே நிறக்குருடியாக இருந் தாலும், அவளுடைய பெண்குழவியிடம் இந்நிறக்குருடு அமையும். இந் நிலைகளைப் (படம்-45) படம் விளக்குகின்றது. ஆனால், ஒரே ஒரு குறையான ஜீன் இருக்கும்பொழுதே அப்பெண் ஓரளவு சிவப்புபச்சை நிறக்குருடாக இருக்க நேரிடலாம் என்றும், இதில் சாதாரண ஜீன் அக்குறையைச் சமாளிப்பதில்லை என்றும் அண்மைக்கால ஆராய்சசிகளால் அறிகின்றோம். இத்தகைய நிலைகளில் கிறக்குருட்டிற்கு ஊர்தியாகவுள்ள பெண்களை இனங்கண்டு கொள்ளலாம்.