உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் சார்ந்த குறைபாடுகள் 1 91

ஜீனினால் ஏற்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி யுளளனா.

கிளாக்கோமா? என்னும் நோய் மிகவும் ஆபத்தானது. கண்ணி னுள்ளிருக்கும் பாய்மத்தின் இயல்பிகந்த அமுக்கத்தால் நேரிடுவது. இதனைத் தொடக்கத்திலேயே சிகிச்சை செய்யாவிடின் கண் பார் வையே இல்லாது போய்விடும். கண் வளர்ந்துகொண்டுள்ள கிலை யில் இந் நோய் சிறுவர்களிடம் ஏற்படடால், இவை பெரிய கண் களாகப் போய்விடும்; வயது வந்தோர்களிடம் இ.து அத்தகைய விளைவினை உண்டாக்குவதில்லை. இன்று பெரும்பாலும் இங் நோய் இளைஞர்களிடம் மரபுவழியாகவே ஏற்படுகின்றதாக ஆய் வாளர்கள் கருதுகினறனர். மிக அரிதாகக் குழந்தைகளிடம் இங் நோய் ஏற்படுவதற்குப் பின்தங்கும் ஜீன்களே பொறுப்பாகவுள்ளன என்றும், மிக அரிதாகச் சிறுவர்களிடம் காணப்பெறும் இந் நோய் பால்-இணைப்பு ஜீன்களால் ஏற்படுகின்றன என்றும் அறிகின் றோம். இளைஞர்களிடம் காணப்பெறும் இந் நோய் மரபுவழியாக வருமாயின், அதற்குக் காரணமாக ஜீன்கள் ஓங்கி நிற்கும் தன்மை யுடையனவாகவோ, அல்லது பால்-இணைப்புடன் கூடியனவாகவோ இருக்கும்.

குருட்டு நிலைக்கு மரபுவழியாகக் கூறப்பெறும் காரணங்களுள் அடியிற் கண்டவை குறிப்பிடத்தக்கவை :

ரெடினிட்டிஸ் பிக்மெண்டோஸா என்பது, படிப்படியாக கோல் களும் கூம்புகளும் சீர்கேடடைந்து கண் திரையில் நிறமிகள் படிதல்: இதனால் குறிப்பிடத்தக்க பார்வைக் குறைகள் நேரிடுவதுடன் குருட்டு நிலையே ஏற்படுதலும் கூடும். தொடக்க நிலையில் இது மாலைக்கண்ணாக” இருக்கும். இஃது ஏற்படும் ஆணின் வயது

9. J5Irms(385TunT — Glaucoma.

10. குழவிப் பருவத்தில் சிலசமயம் ஒரு கண்ணையே பாதிக் கின்றதென்றும், அக் கண் உள்ள பக்கத்தில் முகத்தில் பெரிய பிறப்புஅடையாளத்துடன் சேர்ந்தே வருகின்றதென்றும் கருதுகின்றனர்.

1 1. Retinitis pigmentosa. 12. unroosu 35or - Night blindness.