உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இலக்கியக்கேணி


திருவந்தாதியில்

இவ்வரலாற்றுக்கு மூலமாகிய திருத்தொண்டர் திருவந்தாதிச் செய்யுள், இவ்வரலாற்றைச் சுருக்கமாகத் தருகிறது. அப்பாடல் பின்வருமாறு :--

கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்
செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லுந்திருவாய் [தால்
மற்றவன் தத்தா நமரே எனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம் என்று பேசுவரே.

இத்திருப்பாடலில் 'தத்தா நமரே' என்ற வாக்குப் பயின்றிருத்தல் காண்க. இந்நூலை அருளியவர் நம்பி யாண்டார் நம்பிகள்; இவர் முதலாம் இராசராச சோழன் காலத்தவர்: இவரே திருமுறைகளைத் தொகுத்தவர்; இவர் காலம் முதல் இராசராச சோழன் காலமாகிய கி. பி. 985-1014 இன் இடைப்பட்ட காலமாகும். எனவே மெய்ப்பொருள் நாயனாருடைய திருவாக்கில் முகிழ்த்த "தத்தா நம்ர் " என்ற தொடர் திருவந்தாதியில் தவழ்ந்துள்ளமை காண்க.

கல்லெழுத்தில்

முதல் இராசராசன் என்னும் சோழ அரசர் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டியவர். அக்கோயிலில் "ஸ்ரீ காரியம்" என்னும் அரசாங்க அலுவலில் அமர்ந் திருந்தவர் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவர். இவர் தஞ்சை இராசராசேச்சுரத்தில் ( பெரிய கோயிலில் ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், பரவையார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்டர்