பக்கம்:எழில் விருத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 

சுழல்விளக்கு

கடலில் நீந்திச் செல்கின்ற
   கண்ணைக் கவரும் சிற்றுர்போல்
கடலைத்தாண்டும் நாவாயைக்
   கண்டேன் ஒருநாள் சுழல்விளக்கே !
கடலைத் தாண்டும் நாவாயைக்
   கட்டி அனைத்துன் ஒளிமுத்தம்
இன்றேல் கொடுங்கடலில்
   எதிர்ப்பை யார்தான் முறியடிப்பார்?....................................... 3

நிறைந்த படையைத் தன்னகத்தே
   நிறைத்துக் கொண்டே
மறைந்து மறைந்து கடல் வாழும்
   மாற்றார் கப்பல் நீர்மூழ்கி
உறையு மிடத்தைச் சுழல்விளக்கே!
   உன்கண் கண்டும் ஊரறிய
அறையா திருந்தால் உன்னாட்டார்
   ஊமை என்றே அறையாரோ?................................................ 4

பொங்கிச் சீறி அலையெழுப்பிப்
   போரைச் செய்யும் கடலிடையில்
தங்கித் தவித்து விழிபிதுங்கித்
   தடந்தோள் அறிவு துணையாகக்
கங்குல் பகலில் கடல்எதிர்த்த
   கப்ப லோட்டி செய்தியெலாம்
எங்கட் கேனோ சுழல்விளக்கே !
   இன்னும் சொல்லா திருக்கின்றாய்?....................................... 5