பக்கம்:எழில் விருத்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வாணிதாசன்

வெள்ள மாக மக்களெலாம்
   விரும்பி விரும்பி உனைச்சுற்றி
உள்ளே சுழலும் படியூடே
   உன்மேல் ஏறிச் சுழல்விளக்கே !
கொள்ளும் இன்பம் என்னாங்கொல்?
   குன்றை ஊரை நீள்கடலை
அள்ளும் காற்று வெளியிருந்தே -
   அழகு படுத்திக் காட்டுவதோ?................................... 9

சுங்கம் வாங்கும் கடலோரத்
   துறையில் சுழலும் சுழல்விளக்கே !
எங்கெங் கிருந்தோ வந்தாலும்
   எந்தக் கப்பல் ஆனாலும்
கங்குல் கிழித்து வழிகாட்டிக்
   கரையை உணர்த்தும் மேலான
தங்கக் குணத்துக் கீடிந்தத் .
   தரையில் எதைநான் சொல்வேனே !........................... 10


"இருமா காய்ச்சி அரையடிக்காய்
          இவையே மற்றை அரையடிக்கும்
 வருமா றுணர்க"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.