பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காப்பிய நேர்மை திறன் காண் பெருமக்களே சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையின் அன்னையார் நிதிப் பொழிவில் இன்று நடைபெறுவது இறுதிச் சொற்பொழிவு. முதற் பொழிவில் காப்பியம் என்ற இலக்கியம் உலகம் தழுவியது எனவும். முழுப்பார்வைக் கல்விக்கு உரியது எனவும் விளக்கினேன். இரண்டாம் பொழிவில் காப்பியம் எப்படி நீளுகின்றது. நன்றும் தீதும் எங்ங்னம் போராடுகின்றன. களங்களைப் புலவன் எங்ங்ணம் காலம் இடம் வலி யறிந்து அமைக்கின்றான் என்ற பான்மைகளைப் பெரிதும் எடுத்துக் காட்டினேன். இன்றைய பொழிவில் கர்ப்பிய நேர்மை என்ற தலைப்பின்கண் மன்பதை நோக்கில் சில இலக்கியத் திறன்களை வெளியிட முயல்கின்றேன். - முழுநூற் பாடம் சொற்பொழிவுக்காக என் உரைத் தலைப்புக்களை மூன்றாக வகுத்துக் கொண்டாலும், முழுச் சொற்பொழிவிலும் முழுப் பார்வை முறையை வலியுறுத்துவதே என் நோக்கம். ஏன்? காப்பியம் என்ற இலக்கியத்தின் அகலத்தையும் ஆழத்தையும் காண்பதற்கு இதுவே முறை. வரிசையாகப் படிக்காவிட்டால் புலவனது எண்ண வரிசை எப்படி வெளிப்படும்? நிரந்து இனிது கற்கும் ஒழுங்கு முறை கல்வி யுலகிலிருந்து வர, வர ஒடிக் கொண்டிருக்கின்றது. பாடம் அமைப்பிகள் இவ்வொழுங்கினைக் காற்றிற் பறக்க விட்டு விட்டனர். எந்த நூலாயினும் விட்டுவிட்டுப் பொறுக்கி வைப்பது பாட மரபாயிற்று. இப் பாடமரபு கல்விக்கு முரண். இன்றைய நிலையில் பாடம் என்பது வேறு, கல்வி என்பது வேறு என்றாயிற்று. எதனையும் விட்டு விட்டுப் படிப்பது பாடம். கிடத்தாங்கு ஒழுங்குபடக் கற்பது கல்வி. - - - - ஆத்திசூடி தமிழ் மொழியில் மிகச் சிறிய நூல். 108 ஒரடியுடையது. இந்நூலை நெடுங்கணக்கு வரிசையில் கற்க வேண்டும் என்று ஒளன:ார் . :த்தார். முதல் வகுப்புக்கு ஆத்திசூடி பாடமாக வருகின்றது. இச்சிறுநூலை முழுதும் வைக்கலாம். ஆனால் முப்பது. நாற்பது நீதிகளே பாடமாக வைக்கப்படுகின்றன. வைக்கட்டும். அங்ங்னம் வைக்குங்கால்