பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை ! ! 3 அன்று பாட்டன் நாட்டுக்குப் பரதனை அனுப்பியதன் கருத்து இன்றுதான் புரிந்தது என்று கைகேசிக்குக் கருத்துரைக்கின்றாள் கூனி. இதனால் தசரதன் அவையில் எதிர்பார்க்கும் அரசியலும் இடித்துக்கூறும் அமைச்சியலும் வளரவில்லை என்பது ஒருவாறு பெறப்படும். அயோத்தி அவை ஆமாம் அவை போலும். அனுமன் இலங்கையை எரித்தபின் இராவணன் மந்திரச்சூழ்வு நடத்துகின்றான். இராவணனை ஒட்டிப் பேசுவாரையும் வ்ெட்டிப் பேசுவாரையும் இலங்கையவை வரவேற்றது. தசரதன் மந்திரப் படலத்து அமைச்சர்களே இடம் பெற்றிருப்ப, இராவணன் மந்திரப்படலத்து அமைச்சர் அல்லாதோரும் இடம் பெற்றனர். வீடணனும் இடம் பெற்றான். எனின், இலங்கையவையின் குடியரசுத் தன்மைக்கு வேறு காட்டு வேண்டுமோ? சிட்டர் செயல் செய்திலை, குலச்சிறுமை செய்தாய்' எனக் கும்பகருணனும், 'இலங்கை புறத்தீயால் அழியவில்லை; சானகியின் கற்புத் தீயால் அழிந்தது என வீடணனும் இராவணனை இடிக்கின்றனர். அசைவில் கற்பின் அவ்வணங்கை விட்டருளுதி என்று அறிஞரின் மிக்க வீடணனும் அண்ணன் இராவணனுக்குப் பலர் முன்னிலையில் அறிவுரை கூறுகின்றான். வீடணன், இராமன் பக்கம் சேர்ந்த பின்னரும், வீடணன் மகள் திரிசடையைச் சீதைக்குத் தோழியாக இராவணன் அமர்த்தியிருந்தான் என்பது ஒன்றே போதும் இராவணன் தன் பெருமைக்கு. - காப்பிய நேர்மை காப்பிய நடப்புக்காக இனியவற்றையும் இன்னாதவற்றையும் புலவன் தழுவிப் பாடினாலும், மன்னாயத்துக்கு உண்மையை வடித்துக் காட்டுதல் அவன் கடமை; யார் தீமை செய்தாலும் அதனைச் சுட்டிக்காட்டுதல் அவன் பொறுப்பு. பாத்திரத்தின்மேற் பெரும்பற்று வைத்து அறக் கடமையை அவன் புறக்கணித்தல் கூடாது. பல பாத்திரங்களைத் தனித்தனி ஆராய்ந்து, கம்பர் நேர்மையை நாம் காணலாம். அங்ங்ணம் காணப்புகுதல் மிக விரிவாகும் என்று அஞ்சி ஒரு பாத்திரத்தை மட்டும் கொண்டு காப்பிய நேர்மையைப் புலப்படுத்த முயல்கின்றேன். - பெண்களின் செல்வாக்கு இராமன் தன்னேரில்லாத தலைவன் என்பதைப் பல நிலையிலிருந்து முன்னர்க் கண்டோம். ஆனால் இராமன் எக்குற்றமும் இல்லாதவன் என்று சொல்ல முடியுமா? இந்த வினா வீம்பானது என்று எண்ணவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இராமனாயினும் காப்பியத்துள் ஒரு பாத்திரமே என்று கொண்டு ஆராயவேண்டும். ஒரு காப்பியம் நீளமாக இயங்கவேண்டும் க. 3.