பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 . கம்பர் என்றால் அது தலைமைப் பாத்திரத்தின் குணத்தாலும் இயங்கும், குற்றத்தாலும் இயங்கும். இருவகை நிலையுமின்றிக் காப்பியத்துக்கு நீளம் வாராது. தான் பெறாத இராமனைப் பெற்றதாகக் கொண்டு பேரன்பு காட்டிய கைகேசி மனம் திரிந்த காரணத்தாலும், நெடுநாளும் பெருவரமும் பெற்ற இராவணன் என்பவன் இராமனின் மனைவியை நயந்த காரணத்தாலும் காப்பியம் நெட்டோட்டம் பெறுவதாயிற்று. இராமாயண நிகழ்ச்சிகளில் இராமன் எவ்வாறு நடந்தான்? அவன் நடந்த முறை கம்பர் மனத்து எப்படிப் பட்டது? இராமனிடம் குற்றம் கண்டக்காலும் கம்பர் அதனைச் சுட்டக்கூடாது என்று சும்மா இருந்தனரா? எல்லாப் பாத்திரத்திலும் இராமபாத்திரத்தை மட்டும் காப்பிய நேர்மை என்ற தலைப்பில் ஏன் பேச நினைக்கின்றேன் என்றால், தலைமை ஒப்பில்லா இப் பாத்திரத்தையே விடாது அலசிக் கம்பர் நேர்மை காட்டுகிறார் எனின், வேறு பாத்திரங்கள் அவர்க்கு விலக்காகுமா என்று தெரிவிப்பதற்குத்தான். தசரதன் விழுந்து மன்றாடியும் கைகேசி தான் கேட்ட வரத்தை மீட்டுக் கொள்ளவில்லை. உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிரென்று அடைக்கலமாகக் கணவன் பணிந்தபோதும், இது அதிகாரமா, அறமா என்று மனைவி வினவினாளேயன்றி விட்டுக் கொடுக்கவில்லை. சிற்றன்னையின் சூழ்வினையால், எதிர்பார்த்த இரக்கம் இன்மையால், இராமன் வனம்புக வேண்டியதாயிற்று. தசரதன் மனைவி கைகேசி அவன் சொல்லைக் கேட்கவில்லை. இராமன் மனைவி சீதையும் அவன் சொல்லைக் கேட்கவில்லை. தாய் தந்தையின் ஆணைப்படி வனஞ்சென்று வருவேன்; அதுவரை நீ வருந்தாதே எனவும், சூடும் மேடும் உடைய காடு நின் திருவடிப்போதுக்கு நல்லதன்று எனவும் பக்குவமாகக் கூறிய இராமனுக்கு, நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்றாள் சீதை. அவனை மேலும் பேச விடாது மரவுரி தரித்து வந்து கையைப் பிடித்துக்கொண்டாள். வரவேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றனையே, நீ கூட வந்தால் எல்லையற்ற இடர் தருவாய்' என்று வெளிப்படையாக மொழிந்தான் இராமன். கொற்ற வன்னது கூறலும் கோகிலம் செற்ற தன்ன குதலையள் சீறுவாள் உற்று நின்ற துயரமி தொன்றுமே எற்று றந்தபின் இன்பங்கொலாம்என்றாள். நான் உடன் வருவது ஒன்றே உங்கட்குத் துன்பம். என்னை விட்டுச் சென்று விட்டால் உங்கட்கு எல்லாம் இன்பம் என்று ஊடலும் ஐயமும்படச் சீதை கோணி மொழியவே, பிறிதோர் மாற்றம் பெருந்தகை பேசலன் என்று கம்பர் நாகரிகமாக இக் களத்தை