பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கம்பர் புறப்பட்டபோது கைகேசியும் உடன் சென்றாள் என்பதிலிருந்து, அவள் கூனியினத்தால் கொடியவள் ஆனாளன்றி, இயல்பிற் கொடியவள் இல்லை என்பது பெறப்படும். அதனாலன்றோ இராமன் கடைசி வரை கைகேசியை அன்பிற் சிறந்த தாயாகவே கருதினான். 'சிறக்கும் மாமியர் மூவர்க்கும் என்று மருமகளாம் சீதையும் ஒப்பாகப் பாராட்டினாள். அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் துய்மொழி மடமான் இரக்க மின்மையன் றோவின்றிவ் வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே, எனக் கம்பரும் தூய்மொழி மடமான் இரக்கமின்மை' என்று முன் நிலையையும் பின் திரிபையும் காட்டிப்பாடுவாராயினர். ஆதலால் தக்கவர்கள் பிழை செய்யும் போது புலவன் பக்குவமாகப் புலப்படுத்தினாலும், பிழையை எம்முறையிலேனும் புலப்படுத்த வேண்டுவது புலவன்தன் காப்பிய ஒழுக்கம் ஆகும். இராமன் பேரறிவுடையவன், எதிர்காலம் உணரவல்ல கூர்மையுடையவன், பேராற்றலும் பெரும்பொறையும் உடையவன். ஆனால், பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்ற பேரன்பினோடு வனத்துக்கும் பிரியாது உடன் வந்த மனைவி, முன்வந்த ‘மானைப்பற்றி விளையாடுதற்குத் தருக என்று மன்றாடியபோது, பாவம் என் செய்வான் இராமன்? அவள் ஊடலில் அவன் அறிவோட்டம் நின்று விட்டது. சீதையை மேலும் மறுத்துக் கூறுவதால் பயன்படாது என்று அவன் உள்ளோட்டம் நின்றுவிட்டது. ஆசிரியரே இத்தடுமாறு சூழ்நிலையை உணர்ந்து பாடுகின்றார். நோக்கிய மானை நோக்கி நுதியிழை மதியின் ஒன்றும் துக்கிலன் நன்றி தென்றான் அதன்பொருள் சொல்ல லாகும் சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை யன்றோ அன்னது பழுது போமோ.