பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை м | 19 முதல் இரண்டடிகளில் நுண்மாண் நுழைபுலத்தனாக இருந்தும் குற்றப்பட்டான் மேலும் நல்லது என்றான் எனக் கம்பர் இராமன் தவற்றை வெளிப்படுத்துகின்றார்; மன்குலக் கடமையைச் சரிவரச் செய்கின்றார்; தன்னேரில்லாத் தலைமகன் ஆதலால் இக் குற்றம் செய்தது தேவர் பாக்கியம் என்று ஒர் அமைதியும் கூறுகின்றார். புலவன் கடமையையும் பாத்திரத்தின் பெருமையையும் விடாது காட்டும் ஒரு செய்யுள் இது. சீதை தனிமைப்பாடு இராமாயணத்துப் பெருநிகழ்ச்சிகள் பல. அப் பலவற்றுள்ளும் இராமாயண நடப்புக்குப் பெருந்துணை செய்த நிகழ்ச்சி யான் அறிந்தவரை ஒன்றே. பஞ்சவடியில் சீதையைத் தனியே விட்டுவிட்டு ஆடவர் இருவரும் (இராமனும் இலக்குவனும்) பிரிந்துபோன ஒரு நிகழ்ச்சி பின் காப்பிய நடக்கைக்கெல்லாம் ப்ெருங்காரணம் ஆயிற்று. இலக்குவன் வேண்டுகோட்படி அவனையே மானைப் பிடித்துவரப் போக்கியிருக்கலாம் இராமன். அப்போது நாயக நீயே பற்றித் தருக" என்று சீதை ஊடி இலக்குவன் செலவைத் தடுத்தாள். மாரீசன் குரலைப் பொய்க்குரல் எனவும் இராமனை வெல்வார் யார் எனவும் இலக்குவன் சீதைக்கு எடுத்துரைத்தபோது, அவன் தன் அயல் நிற்பதைச் சிறுமையாகப் பழித்துரைத்து அவ்விடத்தை விட்டுப் போக்கினாள். சீதையுடன் ஆடவர் இருவர் உடன் இருந்தும் இருவரும் அகல வேண்டிய ஒரு களம் ஏற்பட்டுவிட்டது. இதுவே சூழ்நிலைக் கேட்டுக்கு ஒர் அறிகுறி. கண்ணகியோடு பிரியா வாழ்க்கை பெற்று மதுரை வந்த கோவலன் மாதரி இல்லத்துத் தங்கினான். சிலம்பு விற்பனைப் பொருட்டுக் கண்ணகியைத் தனித்து இருக்க வைத்துப் பிரியும் நிலை ஏற்பட்டது. கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை ஒருங்குடன் தழிஇ உழையோர் இல்லா ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ணன் ஆகி, என்று பாடுகின்றார் இளங்கோ. பிரியாக் கண்ணகியை அயல் நாட்டில் தனிமையாக வைத்துப் பிரிதற்கு உரிய சூழ்நிலை வந்தது. என்றால், மேலும் என்ன வருமோ என்ற அச்சம் கோவலன் நெஞ்சுக்கு அவனை அறியாமலே தோன்றிற்று. இச் சிலப்பதிகாரக் களத்துக்கு ஒருபுடை நிகரானது இவ்விராமாயணக்களம். இக்களத்தின் எதிர்கால விளைவு தெளிவுடைத் தம்பிக்குத் தோன்றாமல் இல்லை. மாரீசன் இராமன் குரல்போல வாய்விட்டு