பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - ч. . கம்பர் அரற்றியவுடனேயே. இராமனுக்குத் தம்பியின் ஞானம் புரிந்துவிட்டது. செய்யது அன்றெனச் செப்பிய தம்பியை ஐயன் வல்லன் என் ஆருயிர் வல்லனால், உய்ய வந்தவன் வல்லன்' என்று இராமன் வாக்காகவே கம்பர் பாராட்டுகின்றார். அண்ணனுக்குப் புரிந்தது அண்ணிக்குப் புரியவில்லை. புரிந்த அண்ணன் திருப்பி. வருவதற்குள் ஒழுக்கக் குறைவுபடப்பேசி இலக்குவனைத் துரத்திவிட்டனள் பேதைச் சீதை. போகின்றேன் அடியனேன் பொருந்திவந்துகேடு ஆகின்ற தரசன்தன் ஆணை நீர்மறுத்து ஏகென்றீர் இருக்கின்றீர் தனியீர் என்றுபின் வேகின்ற சிந்தையான் விடைகொண் டேகினான். இலக்குவன் இவ்வளவு தெளிந்த அறிஞன் என்பதனை ஆரணிய காண்டத்தில் அறிகின்றோம். அயோத்தியா காண்டத்தில் சினம் மிக்குப் பரதன்மேல் ஐயங்கொண்ட இலக்குவனா இவ்வளவு தெளிவுடைத் தம்பியாக வளர்ந்து விட்டான் என்று யாருக்கும் வியப்பு உண்டாகும். அதுபோல் அயோத்தி நிகழ்ச்சியில் இராமன் தெளிவையும் ஆரணிய நிகழ்ச்சிகளில் அவன் தெளிவின்மையையும் காட்டுகின்றார் கம்பர். இராமனைப் போகச் செய்ததும் அதன் பின் இலக்குவனைத் துரத்தியடித்ததும் பின்னொரு நாள் சீதையின் நெஞ்சைச் சிறையில் பிளந்தன. வஞ்சனை மானின்பின் மன்னைப் போக்கியென் மஞ்சனை வைதுயின் வழிக்கொள் வாயெனா நஞ்சனை யானகம் புகுந்தநங்கையான் உய்ஞ்சனென் இருத்தலும் உலகங் கொள்ளுமோ. எனவே, ஆரணிய ಹT657- முதல் காப்பிய விரிவுக்கு ஒரு பெருந்துணை செய்த நிகழ்ச்சி சீதையை இருவரும் விட்டுப் பிரிந்தமை என உணர்க. இராமனைக் கண்டித்தல் பிரிதல் ஆகாது என்று நன்கு தெரிந்திருந்தும், சீதையின் வசைமொழியால் இலக்குவன் கட்டாயம் பிரிய வேண்டியவன் ஆயினான். ஆதலின் இலக்குவன் குற்றம் உடையவன் இல்லை. எதனையும் அண்ணன்பால் மறுக்காதவன். தம்பி என்னும் பூடியன்று அடியாரின் ஏவல் செய்தி என்ற தாய் சொல்லைத் தலைமேற் கொண்டவன். இந்நெடுஞ்சிலை வலானுக்கு ஏவல்செய் அடியன் யானே என்று அனுமனிடம் தன்னை