பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

வந்தவர்க ளாரென்று சொல்லி ஒரு

வசனம் நவாபுதுரை கேட்டுவரச் சொன்னார் மறவருட பிரதானி நாங்கள் இங்கே

வந்தோம் நவாபிடம் சொல்லுபோ ராமு சண்டைக்கு வந்தீரோ நீங்கள் இப்போ

சந்திப்புக்கு வந்தீரோ கேட்டுவரச் சொன்னார் தகப்பனது வளவுக்கு ராமு நாங்கள்

சந்திப்புக்கு வந்தோமென்று சொல்லுபோ ராமு திரும்பினார் அர்க்கார ராமு பாதர்

ராமு-நவாபும் திரும்பிவந்த செய்தி சொல்லுதல் சிங்கம் நவாபு துரை தேவடியில் வந்து

ஆண்டவனே மம்முதலி துரையே நான்

அறிந்து வந்த சேதிகளைச் சொல்லுகிறேன் கேளு மறவருட பிரதானி யவர்கள் - சாய்பு

வந்திருக்கும் வேடிக்கை சொல்ல முடியாது இவர்கள் இப்படி வந்தால் இவர்கள்

துரை வந்தா லெப்படி யிருக்குமோ வென்றான் புறத்திலே யிருந்த புலித்தேவன் நல்ல

புலிக்குட்டி நவாபு துரையை யேறிட்டுப் பார்த்து

புலித்தேவன் கோள் மூட்டுதல்

வெகு மோடியாய் வந்தாருன்னு மெத்த

வீரியமாக் சொன்னானே யர்க்கார ராமன் மூத்தவர்கள் சீமையிலே விளையும் சாய்பு

ரசக்கிணறு சேதுபதி சீமையிலே யுண்டு முப்போகம் விளையு மவர் சீமை அப்போ

  • முசியாத வையைநதி சேர்ந்ததவன் தேசம் பனங்காடு பெருத்ததவன் சீமை அதிலே

பத்து நிலையேறி கள்மெத்த வுண்டு கல்லுப் படாததொரு சோறு - அதிலே

முள்ளுப் படாத மீன் மறவருட சீமை காசி முதலாகத் திரிந்தாலும் மறவர்

சீமையைப போலொரு தேசங் கிடையாது சாய்பு இருபத்தினாலு லட்சம் பொன் சீமை

இவர்களே யாளுரா ரிருபிள்ளை மாரும் இருபிள்ளை மார்களையும் பிடித்தால் х தேச

மெல்லா மொருகுடைக்கீ ழாளலா மென்றான் இருபிள்ளை மார்களையும் பிடிக்க தந்திரம்

புலித்தேவ மறுவயணஞ் சொல்லென்று கேட்டார்

  • முசி-சோம்பல் இங்கு - வற்றாது, நாஞ்சில் நாட்டு பா.வ,