பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

في ن xii கூட்டத்தில் உள்ள நாயகி ஒருத்தியைக் காண்பதும், இருவர் கண்களாகிய மடைவழியாகப் பாய்ந்த அன்பு வெள்ளத்தில் இருவர் உள்ளமும் கலந்து கரைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிருேம். ஏழை இடையன் வீட்டில் பந்தற்காலில் கட்டியிருக்கும் தழையை ஆட்டுக்குட்டி உண்பதும், கடற் கரையிலுள்ள வலேயர் தெருக்களில் முத்துக்களேக் கிளிஞ்சி லுக்குள் இட்டுக் குரங்குகள் குழந்தைகளோடு கிலுகிலுப் பை விளையாடுவதும், இடையன் மாலேக்காலத்தில் தன் துடைய புல்லாங்கு முற் கீதத்தில்ை பசுக்களை யெல்லாம் ஒன்றுகூட்டி வீட்டுக்கு வருகையில் வழியிலே மலர்ந்துள்ள முல்லேப் பூக்கவே க் கொத்தோடு பறித்துத் தலையிற் செருகிக் களிப்பதுமாகிய காட்சிகளைக் காண்கிருேம். அரசர்கள் வித்துவான்களோடு கூடிப் பொழுது போக்குவதும், கால வரையறைப்படி அரசியற் காரியங்களேச் செய்வதும், குடிகளுடைய வழக்கை கடுகிலேமை பிறழாது தீர்ப்பதும், விழாக் கொண்டாடுவதும் ஆகிய காட்சிகளேயும் பார்க் கிருேம். நெடுநாட்களாகத் தீமூட்டப் படாமையால் காளான் முகாத்த அடுப்பும் ஒட்டைக் கூரையும் உள்ள வறுமை நிஆலயம் ஒரு பக்கம் சித்திரிக்கப்படுகின்றது; பல பண்டங்களை விற்கும் இடங்களில், பகலிற் கொடிகளாலும் இரவில் விளக்குகளாலும் பாஷை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி இன்ன இன்ன பண்டங்கள் விற்கப்படும் என்பதைக் குறிப்பிக்கும் கடைவீதிகளிலும், அரண்மனை களிலும் திருமகள் நடனம் புரியும் கோலம் ஒரு புறம் சித்திரிக்கப்படுகின்றது. வீரம், காதல், சோகம் முதலிய ரஸ்பாவங்கள் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன’ என்று சங்கத் தமிழை இக்காலத் தமிழுலகத்துக்கு அறிவுறுத்திய தமிழ் வள்ளலாகிய ஐயரவர்கள் சொல்லு கிருர்கள். - - - தமிழனுக்குக் காதலேயும் வீரத்தையும் பாடுவதில் ஆர்வம் 蝙 அதிகம். s' தமிழ்க் கவிதைக்குப் பொருளாக உள்ளவற்றை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருக்கிருர்கள். அகம் என்பது காதல் வாழ்வைப் பற்றியது. ஒரு காதலனும் காதலியும் தாம் அன்பில்ை ஒன்றுபட்டு இன்புற்றதை இன்னதென்று மற்றவர்களுக்குப் புலப்படுத்த முடியாத பொருளாகி அகத்துக்குள்ளே •rfé புதவறாக நிற்பதால் இன்பப் பொருளை அகம் என்று சொன்னர்கள். மற்றவற்றையெல்லாம் புறமென்று