பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii வகுத்தார்கள். மற்றவை பலவான லும் அவற்றுள் தலைமை வகிப்பது வீரமே. . இன்ன தென்று இன்பம் நுகர்ந்தோர் சொல்ல முடியாததைக் கவிஞன் சொல்லிவிடுகிருன். காதலைக் கதையாக்கி, இன்பத்தை நுகர்வதற்கு முன் காதலனும் காதலியும் சந்திப்பதையும், அவர்கள் உள்ளங்கள் கடல் போலக் கொந்தளிப்பதையும், ஐயமும் மயக்கமும் தெளிவும் உண்டாவதையும் கவிஞன் தமிழ்க் கவிதையிலே கோலம் செய்கிருன் காதலர் ஒன்று பட்டபிறகு பிரிவதையும் பிரிவிலே அவ்வுள்ளம் இரண்டும் குமுறிக் குமைவதையும் சொல்கிருன். இந்தக் கதை முடிவின்றி வளர்கிறது. அவர்களுடைய உள்ள உணர்ச்சிகள் உரையாக வருகின்றன. காதலி இன்பத்திலும் துன்பத்திலும் தன் உள்ளத்தைக் காதலகுேடும் தோழியோடும் வெளிப் படுத்துகிருள். காதலனும் காதலிக்கும் தோழிக்கும் தோழனுக்கும் தன் உணர்ச்சியை உரையாக்கிச் சொல் கிருன். சங்கநூல்களில் இந்தக் காதல் கதை - அகப்பொருள் - நாடகக் கவியைப் போலப் பாத்திரங்களின் கூற்றுக்களாகவே அமைக் திருக்கிறது. கவிஞன் அந்தப் பாத்திரங்களாக இருந்து கடிக்கிருன். தன்னைத் தனியே காட்டிக் கொள்வதில்லை. காதல் உணர்ச்சியின் பலவேறு உருவங்களே யும் நிலைகளேயும் அலுக்காமல் சலிக்காமல் ஆயிரக்கணக்கான பாடல்களில்ை பாடிக் குவித்தார்கள் சங்க காலத்துப் புலவர்கள். இந்தக் காதல் கதையைச் சில சில அழகான வரம்புக்கு உள்ளாக்கி அவ்வரம்புக்குள்ளே கவிதை வெள்ளத்தைப் பாயச் செய்திருக்கிருர்கள் தமிழர்கள். அதல்ை அகப்பொருளேத் தமிழர் தமக்கே உரிய தனிச் சொத்தாகப் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வார்கள்." காதல் நாடகம் படர்வதற்கு கிலேக்களமாக இயற் கையை வைத்திருக்கிருர்கள். இயற்கை எழிலும் பருவ காலங்களும் காதலனும் காதலியும் கொள்ளும் உணர்ச் சிக்கு உதவியாகின்றன. இதற்காக இத்தக் காதல் ஐந்து பிரிவாகப் பிரித்திருக்கிருர்கள். காதலனும் காதலியும் தனிமையிலே சந்தித்து இன்பம் அடைவது ஒரு பகுதி. இதைக் குறிஞ்சி என்ற திணையாக வகுத்தார்கள். காதலன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டிக் காதலியைப் பிரிந்து செல்கிருன். இந்தப் பிரிவைப்பற்றிச் சொல்லும் பகுதியைப் பாலை என்று பிரித்தார்கள். காதலன் பிரியவே தலைவி தன் பிரிவுத் துன்பத்தை ஆற்றிக்கொண்டு தலைவன்