பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv வருவான் என்று அறம் திறம்பாமல் இருக்கிருள். இது முல்லையாகும். தன் காதலியுடன் வாழும் ಶಿಖJಪ dE fi ll}Łs) மீதுார்ந்தமையால் பரத்தையரை கச்சிச் செல்லத் 5&ుఖ్ ஊடலை அடைகிருள். இது மருதத்தின் பாம். படும். பிரிவுத் துன்பம் தாங்காமல் தலவி வருந்துகிருள். இது நெய்தலென்ற பகுதியில் அடங்கும். இந்த ஐந்துக்கும் தனித்தனியே நிலங்கள் வகுத் திருக்கிருர்கள். மலேயும் மலேயைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம், காதலனும் காதலியும் இன்புறுவதற்கு ஏற்றது. அது. நில மகளின் பருவ எழிலுக்கு அடையாளம்போல வானத்தைத் தொட்டு நிமிர்ந்து நிற்கும் மலேச்சாரலில் இன்னெலியோடு தாவும் அருவியும் பூம்பொழிலும் உள்ள பரப்பில் தனிமை கிலேயில் காதலர் ஒன்று படுவது பொருத்தமானது என்று கண்டு அங்கிலத்தைப் புணர்ச்சிக்கு உரியதாக வைத்தார்கள். - - பாலே சிலம் பிரிவுக்கு உரிய கிலேக்களம். பிரிவு துன்ப உணர்ச்சியை விளைவிப்பது. அதைச் சொல்லும் கவிஞனுக்கு அவ்வுணர்ச்சிக்கு உதவி செய்வதாக ஒரு கிலேக்களம் (Back rேound) அமைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் ! உயிரற்ற பொட்டலாக மரம் கரிந்து புனல் வறந்து மான் கலங்க யானே மயங்கும் பாலே நிலம் வெம்மைக்கு இருப்பிடம். அந்த வெம்மைப் பரப்பிலே பிரிவுத் தீ பின்னும் வெம் மையை அடைகிறது. ஆதலின் பிரிவைப் பாலை நிலத்திலே வைத்துப் பாடினர்கள் கவிஞர்கள். இப்படியே ஏனைய வையும் அமைந்தன. - சிறந்த ஓவியன் ஒருவன் தான் எழுதும் சித்திரத்தின் தலைமைப் பொருளுக்கு ஏற்ற கிலேக்களத்தை அமைத்துக் கொள்வது போலவும், இசைவாணன் தான் பாடும் பாட்டுக்கு ஏற்ற சுருதியை அமைத்துக்கொள்வது போலவும் இந்த நிலங்களும் காலங்களும் உதவுகின்றன. இப்படிப் பலகாலமாக இயற்கை யெழிலே கிலேக்கள மாகவும் காதலன் காதலியரை முக்கிய பாத்திரமாகவும் அவர்கள் உள்ளத்துாடே எழுந்து புரளும் உணர்ச்சி அலைகளேக் கவிக்கு உரிய பொருளாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் காவிய உலகத்திலே எக்காலத்தும் வாடாமல் பச்சென்று இருப்பவை. தமிழனுக்கு இத்தகைய சொத்து ஒன்று இருப்பதைத் தமிழுலகமே சிலகாலம் மறக் திருந்தது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகையாகிய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் சங்க நூல்களே