பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV வெளிக் கொணர்ந்து துப்புத் துலக்கி மெருகிட்டுத் தமிழர் களுக்கு உதவினர்கள். இன்று தமிழ்நாட்டில் பண்டைத் தமிழர் சரிதமும், பண்டைக் கவிதையின்பமும் தமிழர் உள்ளத்திலே விளையாடுவதற்கு அவர்களுடைய முயற்சியே விதையாகும். - அப்பெரியாருடைய திருவடிக்கீழ்ப் பல வருஷங்கள் பணி புரிந்து தமிழ் கற்கும் பேறு பெற்றமையால் சங்ககாலக் கவிதை யின் பத்தின் சில துளிகளே என் சிறுமதியால் அறிந்து இன்புறும் வாய்ப்பு உண்டாயிற்று. சங்க நூலே நேரே பயின்று இன்புறும் தகுதி யாவருக்கும் இராது. ஆயினும் சங்கநூற் பொருளே உணர்ந்தால் இன்புறுவதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் தகுதி உண்டு. ஆகவே சங்கநூலில் உள்ள சில செய்யுட்களைப் புது முறையில் தமிழன்பர் களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில்ை 'காவியமும் ஓவியமும் என்ற பெயரோடு ஒரு கட்டுரை வரிசையைக் கலைமகளில் தொடர்ந்து எழுதிவரலானேன். காவியம் சொல்லோவியம். அதைப் படிக்கும் பொழுதே உள்ளத்தில் ஓவியக் காட்சி தானே அமைகின்றது. உருவம் இல்லாத பொருள்களையும் உணர்ச்சிகளையும் உள்ளம் உணரும்படி செய்துவிடுகின்றது. காவியத்துக்கு உள்ள பல இயல்புகள் ஒவியத்துக்கும் உண்டு. உலகிற் காணும் பொருள்களின் குறைபாடுகளைப் போக்கி அதற்கு ஒர் அழகை ஊட்டி கித்தியத்துவத்தைத் தருவதில் காவியமும் ஒவியமும் ஒரே கிலேயில் இருப்பவை. இரண்டும் வெறும் உருவத்தை மாத்திரம் காட்டுவதோடு கில்லாமல் உணர்ச்சி களேயும் காட்டும்போது சிறப்பை அடைகின்றன. சங்க காலக் காவிய உலகத்தின் காட்சி ஒவ் வொன்றும் ஒவ்வொரு சித்திரம், கலைத்திறம் கைவந்த ஒவியர்களுக்குச் சங்கநூல் ஒரு பெரிய களஞ்சியம். வண்ண ஒவியங்களும், புனேயா ஒவியங்களும் வரைவதற்குப் பொருள் எங்கே எங்கே என்று தேடவேண்டாம். சங்கநூல் களிலே புகுந்தால் பல்லாண்டுகள் ஒவியம் படைக்கப் பண்டம் இருப்பதைக் காணலாம். இந்த கினேவினல் காவியச் சிறப்பை ஒவியத்தாலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற முயற்சி எழுந்தது. அதற்கு உறுதுணையாக ஒவியர் ரீ ராஜம் எங்களுக்குக் கிடைத்தார். இந்திய ஓவியக்கலேயில் தேர்ச்சிபெற்ற அவர் காவியத்தின் கருத்தை மனத்திலே பதித்துப் பிறகு அதனைச் சித்திரமாக மாற்றியிருக்கிருர், - -