பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi காவியத்துக்கு ஒவியம் வேண்டுமானல் இக் காட்டு ஒவியங்களே பொருத்தமாக இருக்கும். நம்முடைய காவியங்களில் குறிப்பிளுல் பொருளைப் புலப்படுத்தும் முறையை மிக உயர்வாகக் கொண்டாடுவார்கள். 'கடவினும் பெரிய கண்கள்' என்று கவிதையிலே சொல்லும் போது சிதாபிராட்டியின் உள்ளத்தின் ஆழத்தைப் புலப் படுத்தும் வாயிலாகக் கண்கள் இருக்கின்றன என்றே கருத வேண்டும். காதளவு நீண்ட கண் என்ருல் காடாவை வைத்து அளந்து பார்த்து, காதுக்கும் கண்ணுக்கும் இரண்டங்குலம் இடைவெளி இருக்கிறதே !' என்று குறை கூறலாமா ? கண் நீண்டது, மிக நீண்டது” என்றுதான் நமக்குச் சொல்லத் தெரியும். கவிஞன் அதைத் தன்னுடைய கவிதை அளவைக் கொண்டு காதளவு நீண்ட கண்' என்று சொல்கிருன். - - கவிதையிலே தளிர்போல் மெலிந்த விரல்களேயும், கொடிபோல் நுடங்கிய இடையையும் கண்டு அவற்றின் மென்மையை உணர்ந்துகொள்கிருேம். ஆனல் ஒவியத்தில் விரல்களைச் சற்று நீளமாகவும் துவண்டனவாகவும் கண்டால், இது இயற்கைக்கு மாமுனது ' என்று சொல் கிருேம். கவிஞன் தளிர்போன்ற விரல்' என்று சொல் வதையே ஓவியப் புலவன் சித்திரத்திலே காட்டுகிருன் என்பதை காம் சற்று ஊன்றிக் கவனித்து உணர்ந்தால் அதையும் அநுபவிக்க முடியும். காவிய உலகம் இந்த இயற்கை உலகத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், பலகாலும் கேட்டுக் கேட்டுப் பழக்கமாகி விட்டமையால் 'இது கவிதை' என்றும், இதைப் பார்க்கும் கண்ணே.வேறு' என்றும் தெரிந்து கொண்டிருக்கிருேம். கவிஞனே நம் முடைய உலகத்துப் புழுதியிலே இழுத்து வந்து காண முடியாது. கவிஞனது உலகத்திலே காம் புகுந்து பார்த்து இன்புறவேண்டும் என்றே அறிஞர்கள் சொல்கிரு.ர்கள். இந்திய ஓவியக்கலையும் காவியத்தைப் போலத் தனக்கென ஒரு தனி உலகத்தை உடையது. கண்ணினலே காணப் படும் பொருளே உள்ளது உள்ளபடியே போட்டோப் படமாகக் காட்டுவதைவிட உணர்ச்சியையும் கருத்தையும் புலப்படுத்தும் சில வகைக் குறிப்பினுலே காட்டவேண்டும் என்பது ஒவியப் புலவனது நெறி. காம் நம் நாட்டுக் கலையை மறந்துவிட்டோம். அதனால் அது புதிதாகவும் இயற்கைக்கு மாருகவும் படுகிறது. சப்பளம் கூட்டி உட்காரும் கிராமத்துக் குழந்தைகளைக் காணும்போது முழு உறை