பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காவியமும் ஒவியமும் அவனுக்குச் சொந்தம். 'கல்வய லூரன்' என்ற சிறப்புக்கு அவன் எவ்வகையிலும் தகுதியுடையவன். இவை மட்டுமா? முத்தும் பவழமும் பிறக்கும் பெருங்கடற்கரையளவும் அவன் நாடு பரந்திருக் கிறது. கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலப் பரப்பையும் அவன் பெற்றிருப்பதால், 'தண்கடற் சேர்ப்பன்' (தண்ணிய கடல் துறையை உடையவன்) என்ற பெயரால் சில சமயங்களில் அறிஞர்கள் அவனைப் புகழ்வதுண்டு. இப்படிக் குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல் என்னும் நால்வகை கிலத்துக்கும் தலைவனகிய அவ னுக்கு இப்போது காதற் பயிர் விளக்கும் அவள் கிடைத்தாள். இனி அவனுக்கு என்ன குறை ? இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களே. கடவுள் திருவருளால் கண்டார்கள் ; காதல் கொண்டார்கள் அளவளாவினர்கள். இப்போது அவன் பிரிங்து போயிருக்கிருன். மறைவாகக் காதல் புரியும் ஒழுக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. உலகறிய் மணம் புரிந்துகொள்ளவே விரும்பினர். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய அவன் பிரிந்து சென்ருன். - இவ்வளவு வயசு ஆகும் வரையில் அவனைப் பிரிந்திருந்தாளே ; இப்போது ஒரு கணமேனும் பிரிந்திருக்க முடியவில்லை. அவனே அறியாமல் இருந்த காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அவளைத் துன்புறுத்தவில்லை. அவன் வரவுக்காக அவள் காத் திருந்தாள். அவள் அழகு காத்திருந்தது ; அவள் உணர்வு காத்திருந்தது ; உயிரே காத்திருந்தது. இன்னும் அவனைக் காணுமல் இருந்திருந்தால் இந்த உலகம் அழியும் வரையில் அவள் அவனுக்காகக் காத்திருப்பாள். அப்பொழுதெல்லாம் அவள் கன்னி.