பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையின் அக்கிரமம் - 15 இப்போது அவள் காதலி. ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. தனிமை அவளே வருத்து கிறது. தனியிடத்தே சென்று அவனேயே நினைந்து புலம்புகிருள். ஓடைக்கரையிலும், சுனேக் கரையிலும், கழிக் கரையிலும் சென்று தன் பார்வையை நீர்மேல் நிமிர்ந்து கிற்கும் மலர்க் கூட்டத்தில் செலுத்துகிருள். பகல் நேரத்தில் சென்று அவனுடைய நினைவிலே தன்னை மறந்து வீற்றிருக்கிருள். அவள் கண் முன்னே சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அதை அவள் உணரவில்லை ; அவள் உள்ளம் கண்பார்வை யோடு கலக்கவில்லே. - திடீரென்று அந்த ஆச்சரிய நிகழ்ச்சி கண்ணில் படுகிறது. அவள் அங்கே வந்து அமர்ந்தபொழுது தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன ; நீல மலர்கள் குவிந்திருந்தன. இப்போதோ தாமரைகள் குவியத் தொடங்கின ; நீல மலர்கள் இதழ் விரிந்தன. 'அட! மாலேக் காலம் வந்துவிட்டதுபோல் இருக் கிறதே ' என்று திரும்பிப் பார்க்கிருள், சூரியன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு மலே வாயில் விழுந்து கொண்டிருக்கிருன். பார்த்தவுடன் பகீரென்கிறது அவளுக்கு. - - மாலைக் காலத்தைக் கண்டால் அவளுக்கு யமனக் கண்டதுபோல் இருக்கும். ஊரெல்லாம் குறட்டை விட்டுத் துரங்க, தான் மட்டும் தனித் திருக்கும் இரவுக் காலத்தை அறிவுறுத்துவதல்லவா அந்தப் பாழும் மாலே அதற்கு எப்படித் தப்புவது ? 'இதென்ன! நான் இப்பொழுதுதானே வந் தேன்! அதற்குள் எப்படி மாலேக்காலம் வந்தது ? பெரிய அக்கிரமமாக இருக்கிறதே ' - அவள் அங்கிருந்து ஓடி உப்பங்கழியின் பக்கத் திலே சென்று பார்க்கிருள். அங்குள்ள நெய்தல் மலர்கள் அவளுடைய உள்ளத்தைப் போலக் கூம்பி