பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காவியமும் ஓவியமும் யிருக்கின்றன. காலத்தை உணர்த்தும் இயற்கைக் கடிகாரம் அவை. . 'சந்தேகமே இல்லே. மாலேதான் வந்துவிட்டது. அதற்கு இப்போதுதான் வரவேண்டு மென்ற நியதி இல்லையோ ! இந்தப் பட்டப் பகலிலே மாலை வரும் அக்கிரமத்தைக் கேட்பவர்கள் ஒருவரும் இல்லையா !” மாலை, இரவு, கள்ளிரவு, இவற்ருல் வரும் தாபங்கள் எல்லாம் அவள் உள்ளக் கண்ணிலே ஒன்றன்பின் ஒன்ருக வந்து பயமுறுத்துகின்றன. சரிதான் ! கேட்பாரற்ற ஊரிலே யார் எதைச் செய்தால்தான் என்ன ? என்னுடைய உயிர்க் காதலர் என்னேப் பிரிந்திருக்கிருர். இந்தச் சமயம் பார்த்து இப்படியெல்லாம் அக்கிரமம் நடக்கிறது. என்னடா ஆச்சரியம் இந்த மாலேக் காலந்தான் தவறுதலாக வந்து விட்டதென்று கினேத்தால் இதன் கூட்டாளி களுமா இப்படிச் செய்யவேண்டும் ? சூரியன் இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துவிட்டான் கெய்தல் மலர்களும் இவ்வளவு சீக்கிரம் குவிந்துவிட்டன ! எல்லாம் வாஸ்தவமாக முன்பெல்லாம் நடக்கிற மாதிரியே இருக்கின்றன. ஆனால், பொய் பொய் ! இது நல்ல கடும்பகல். இந்தக் கடும்பகலில்தான் வஞ்சகமாக மாலே வந்திருக்கிறது." பெருமூச்சு விடுகிருள் கண்ணே வெறித்துப் பார்க்கிருள். மாலே ஏதோ ஒர் உருவத்தை எடுத்துக் கொண்டு அவள் முன்பு கிற்கிறதா என்ன ? அவள் அதோடு பேசுகிருளே ! என் செயலெல்லாம் அழியும்படி வந்த மாலையே!” . மாலைக்காலம் வந்தால் அவள் செத்த பிணம் போலத்தான் ஆகிவிடுவாள். விரகவெந்தி மாலைக் காலத்தில்தான் கொழுங்தோடிப் படரும். அவள் அதல்ைதான் அதைக் கண்டு துடிதுடிக்கிருள். மாலப்போதே 1 என் தலைவர் பிரிந்தார். இதுவே சமயமென்று, நீ முன்பெல்லாம் வருவது.