பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காவியமும் ஒவியமும் கிடக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் ஒரு சாண் உயரத்தில் ஒரு மொட்டை மூங்கில் கிற்கிறது. அதில் இலையும் இல்லை; கொழுந்தும் இல்லை. பாறைகளெல் லாம் பொரிந்து போய் ருத்திரமூர்த்தியின் நெற்றிக் கண்ணின் பார்வை விழுந்த இடத்தைப்போல அந்தப் பூமி ஒரே பரப்பாகப் பரந்திருக்கிறது. கானலும், அதை நீரென்று எண்ணி ஒடித் திரியும் ஒன்று அல்லது இரண்டு மான்களும் அதுவும் உலகத்தில் ஒரு பகுதி என்பதை நினைவுறுத்திக்கொண் டிருக்கின்றன. காதலன் போகும் வழி இதுதான். தோழி பாலே நிலத்தைப்பற்றிக் கேட்டிருக் கிருள். அதன் வெம்மையையும், அதன் வழியே வியாபாரிகள் பிரயாணம் செய்வதையும், வழிப்பறி செய்வோர் அவர்களைக் கொள்ளே இடுவதையும் அவளுக்குப் பலர் சொல்லி இருக்கிருர்கள். அவற்றை எல்லாம் அவள் கினேவுக்குக் கொண்டு வருகிருள். தன் உயிர்க் காதலனது பிரிவைத் தாங்கமாட்டாமல் துடித்துச் சோர்ந்து விழுங்து கிடக்கும் தலைவியைப் பார்க்கும்போது அவள் மனம் மறுகுகின்றது. 'இவள் துயரத்தை மாற்றுவது எப்படி ?' என்று யோசிக் கிருள். அவளுக்குக் கற்பனை அறிவு உண்டு. தலை விக்குக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கும் தந்திரத் தில் அவள் மிகவும் சாமர்த்தியம் உடையவள். ஆதலின், பாலை கிலத்தின் கொடுமைப் பரப்புக் கிடையே காணப்படும் அன்பை, தூய காதலே, வெளிப் படுத்தும் ஒரு காட்சியை அவள் உள்ளத்துள்ளே காண்கின்ருள். 米 来 来 崇 நீரில்லாத பாலேவனந்தான் அது. பல இடங் களில் பழைய காலத்தில் தண்ணிர் தேங்கி இருந்த குழிகள் மாத்திரம் இருக்கின்றன. இரண்டு மான்கள் கா வறண்டு கண் சுழலத் திரிகின்றன. ஒன்று பெண்; மற்ருென்று அதன் ஆண்.