பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் செய்த தந்திரம் 49 ஆணுக்குத் தன் தாகம் பெரிதாகத் தோன்ற வில்லை. இந்த மெல்லியலுக்குச் சிறிது நீர் தேடித் தரவேண்டுமே!’ என்று அது தவிக்கின்றது. கடவுள் கருணை செய்கிருர், எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய சுனே காணப்படுகிறது. சூரியனது வெயிலால் அதில் சுண்டிப்போய்க் குழம்பிய சிறிதளவு நீர் தேங்கி கிற்கிறது. இரண்டு மான்களும் அந்தச் சுனைக்கருகில் கிற்கின்றன. o அன்பின் அதிசய சக்திதான் என்ன சிறப் புடையது! அன்பின் முதிர்வில் இணையற்ற தியாகம் கணிகின்றது. அந்தச் சுனேயிலுள்ள சிறிதளவு நீரை யார் உண்பது என்பதில் விவாதம் வந்துவிடுகின்றது. 'நான்தான் உண்பேன்', 'கான்தான் உண்பேன்’ என்ற அசுர எண்ணம் அங்த மான்களிடத்தில் தோன்ற வில்லை. நீ குடி என்று ஆண்மான் அன்பு கனியச் சொல்கிறது; தோன் குடிக்கவேண்டும்' என்று பெண் மான் பேசுகிறது. தெய்விகக் காதலிலே தோன்றிய எண்ணமல்லவா ? - - - - சிறிது நேரம் இரண்டும் அங்கே நிற்கின்றன. ஆண்மான் தன்னுடைய ஆண்மை அதிகாரத்தில்ை பெண்மானேக் குடிக்கும்படி வற்புறுத்தலாம். பெண் மானும் அந்த வற்புறுத்தலுக்கு அஞ்சிக் குடிக்கலாம். அப்பொழுது அது மனத்தில் மகிழ்ச்சியோடு இனிமையாக உண்ணுதே. கம் காதலன் குடிக்க வில்லையே! என்ற வருத்தத்தோடு அது குடிக்கும். அந்த் வருத்த மிகுதியினல் அது குடித்தும் குடிக் காததுபோலவிே அல்லவா இருக்கும்? இந்தயோசனை ஆண் மானுக்குத் தோன்றுகிறது. இரண்டு பேரும் குடிக்கவோ அதில் ஐலம் இல்லை; அது போதாது. இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது? தான் உண்டு மிஞ்சிய நீரைக் குடிப்பதால்ை பெண்மான் அதனே இனிது உண்ணும். இல்லை யெனில் உண்ணுது. அதன் காதல் உயர்வு அப்படி காவி. ?