பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'50 காவியமும் ஒவியமும் இருக்கிறது. இந்தப் பெரிய சிக்கலப் போக்கு வதற்குத் திடீரென்று அதற்கு ஒரு தந்திரம் தோன்று கின்றது. . - - வெகு வேகமாக அந்தச் சுனேயில் ஆண்மான் தன் வாயை வைத்து உறிஞ்சுகின்றது . வாஸ்தவத்தில் ஜலத்தைக் குடிக்கவில்லே. குடிப்பது போலப் பாசாங்கு செய்கிறது. 'உஸ்” என்ற ஒலி மட்டும் கேட்கிறது. அது பெண்மானின் காதிலே படும்போது அதன் உள்ளம் குளிர்கின்றது. பாதித்தாகம் அடங்கி விடுகிறது. 'கம் காதலன் உண்டு தாகம் தீர்த்துக் கொண்டான். அவன் உண்டு மிஞ்சியதை நாம் இனிக் குடிக்கலாம் என்று அது கினைக்கின்றது. அப்படியே மிக்க மகிழ்ச்சியோடு அது சுனையிற் சிறிதளவுள்ள நீரைக் குடித்து விடுகின்றது. அங்ர்ே எய்தாது (போதாது) என்று எண்ணிக் கலங்கிய கலைமான், பிணமான் இனிது உண்ண வேண்டித் தன் கள்ளத்தினல் ஊச்சிய (உறிஞ்சிய) தந்திரம் பவித்து விட்டது. அது பிணேமானத் தழுவிக் களிக்கின்றது. ,来 米 来源 米 பால வெம்மையினிடையே நிகழும் இந்த அன்பு நிகழ்ச்சி தோழியின் உள்ளத்தைக் குளிர்விக் கின்றது. அதை அப்படியே தலைவிக்குச் சொல் கிருள். 'உன் காதலர் திருவுள்ளத்திலே போவதாக விரும்பிய நெறி இத்தகையது என்கிருள். வெவ்விய பாலேயிலே ஆண்மான் தன் பெண்மானின் துயரைத் தீர்க்கச் செய்யும் தந்திரத்தைப் பார்த்து கின் காதலன் உன்னை நினைப்பான். அந்த மானுக்குள்ள அன்பு நிலைகூடத் தன்னிடத்திலே இல்லேயே என்று வருந்து வான். விரைவிலே போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுவான் என்ற விஷயத்தைத் தோழி சொல்வதில்லை; ஆலுைம் அந்தமான் கதை யைக் கேட்ட தலைவி அதை ஊகித்துக் கொள்கிருள். அவளுக்கு கம்பிக்கை உதயமாகிறது. வருவான்' என்ற துணிவோடு அவனே எதிர்பார்த்து. நிற்கிருள். -