பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலைகள், சூளைகள்


இந்த யுத்தத்தில் பறக்கும் குண்டுகள், அணுசக்தி (த.க.), நீர்மூழ்கிக் கப்பல்கள் (த.க.), கடற்கண்ணிகள், போர் விமானங்கள், ராடார் (த.க.) போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த யுத்தத்தில் மொத்தம் இரண்டு கோடி வீரர்கள் உயிரிழந்தனர். குண்டு வீச்சுகளினால் இறந்த மக்கள் தொகை பல லட்சம். ஹிட்லர் கொன்று அழித்த யூதர்கள் தொகை 50 லட்சம். பல்லாயிரக் கணக்கான கப்பல்களும், விமானங்களும் நாசமாயின. குண்டுகளினால் இடிந்து தரைமட்டமான கட்டடங்களின் தொகை எண்ணில் அடங்காது.

இந்த யுத்தத்தின் விளைவாக, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற சிறந்த உண்மையை மக்கள் உணர்ந்துகொண்டனர். மீண்டும் ஓர் உலக யுத்தம் வந்தால் உலகமே அணுசக்தியால் தீய்ந்துவிடும் என்ற பயங்கர உண்மையை இரண்டாம் உலக யுத்தம் எடுத்துக் காட்டியுள்ளது.


உலைகள், சூளைகள்: வீடுகளில் உணவு சமைக்க நாம் அடுப்புகளைப் பயன்படுத்துகிறேம். அடுப்பில் உண்டாகும் வெப்பத்தினால் உணவு வெந்து பக்குவம் அடைகிறது. இதுபோல் தொழிற்சாலைகளில் இரும்பு, எஃகு, கண்ணாடி போன்றவற்றைத் தயாரிக்கவும் வெப்பம் தேவை. வீட்டில் உணவு சமைக்க 100° வெப்பம் போதும். ஆனால் தொழிற்சாலைகளிலோ இதைப்போல் பலமடங்கு வெப்பம் வேண்டும். இதற்காக அங்குப் பெரியபெரிய அடுப்புகள் உள்ளன. இவற்றுக்கு உலைகள் என்று பெயர். இந்த உலைகளில் வெப்பம் உண்டாக்க நிலக்கரி, நிலக்கரியை எரித்துத் தயாரித்த கல்கரி ஆகியவற்றை நிரப்பி எரிப்பார்கள். சில உலைகளில் பெட்ரோலியம், எரிவாயு முதலியவற்றையும் எரிப்பது உண்டு.

தொழிற்சாலைகளில் உலைகள் பலவகை உண்டு. அவற்றின் அமைப்பும் பலவிதமாக இருக்கும். ஊது உலை, திறந்த கணப்பு உலை, எதிர்அனல் உலை, மின்சார உலை ஆகியவை முக்கியமானவை.


ஊது உலை (Blast furnace) : இரும்புத் தாதுக்களிலிருந்து இரும்பைத் தனியாகப் பிரித்து எடுக்க இந்த உலை உதவுகிறது. இது மிகப் பெரியது. சில உலைகள் 30 மீட்டர் உயரம் இருக்கும். அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய செங்கற்களால் இது கட்டப்பட்டிருக்கும். இதன் வெளிப்புறத்தில் கனமான எஃகுத் தகடுகளை அடித்திருப்பார்கள். இரும்புத்தாது, கல்கரி, சுண்ணம்புச்சல் ஆகியவற்றை உலையின் உச்சியில் உள்ள வாய்வழியாக உலையினுள் கொட்டுவார்கள். உலையின் அடிப்புறத்தில் உள்ள சில குழாய்களின் வழியாகச் சூடேறிய காற்றை உலையினுள் செலுத்துவார்கள்.

ஊது உலை

இக்காற்று கல்கரியை எரித்து அதிக வெப்பத்தை உண்டாக்குகிறது. தாதுவில் கலந்துள்ள ஆக்சிஜன் கரியுடன் எரிந்து கார்பன் டையாக்சைடாக மாறி வெளியேறும். சுண்ணாம்புக்கல் சுண்ணாம்பாக மாறி மணலோடு சேர்ந்து கசடாகத் தேங்கும். உருகிய இரும்புக் குழம்பு உலையின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு குழாய் மூலம் வடிந்துவிடும்.

செம்பு, ஈயம் போன்ற உலோகங்களையும் அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்க இத்தகைய உலையே உதவுகிறது. ஆனால் இதற்கான உலை சிறியதாக இருக்கும்.


திறந்த கணப்பு உலை (Open hearth furnace ) : எஃகு தயாரிக்க இந்த உலை பயன்படுகிறது. ஊது உலையில் பிரிக்கப்பட்ட இரும்பை இந்த உலையிலிட்டுச் சூடேற்றிச் சுத்தப்படுத்துவர். பிறகு அதனுடன் கரியையும் குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்களையும் சேர்த்து எஃகு தயாரிப்பர்.

எதிர் அனல் உலை (Reverberatory furnace) : இந்த உலையின் சுவர்களும் கூரையும் வழவழப்பாக இருக்கும். இதனால் வெப்பம் இவற்றின்மீது பட்டுப் பிரதிபலித்துச் சூடேற்றப்படும் பொருள்களையே மீண்டும் தாக்கும். இம்முறையினால் வெப்பம் அதிகமாகும். எஃகு, செம்பு போன்ற உலோகங்களைத் தயாரிக்கவும் கண்ணாடியை உருக்கவும் இத்தகைய உலை உதவுகிறது.

மின்சார உலை (Electric furnace ) : எல்லா உலைகளையும்விட மின்சார உலை சிறந்தது. மற்ற உலைகளில் 1100° முதல் 1200° வெப்பமே கிடைக்கும். ஆனால் மின்சார உலையில் 3000° வரை வெப்பம் பெறலாம். உலோகங்களை உருக்குவதற்கு