பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலோகங்கள் - உள்ளெரி எஞ்சின்

47


எல்லா உலோகங்களுக்கும் பொதுவாகச் சில தன்மைகள் உண்டு. சுத்தியால் அடித்தால் அவை ஆனால் நெகிழும். இதனால் உலோகங்களை நமக்கு வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். அவற்றை உருக்கி அச்சுகளில் ஊற்றித் தேவையான உருவத்தில் வார்க்கலாம். மெல்லிய தகடுகளாக அடிக்கலாம். நுண்ணிய கம்பிகளாக இழுக்கலாம். எல்லா உலோகங்களும் வெப்பத்தையும், சாரத்தையும் கடத்தக்கூடியவை.

பெரும்பாலான உலோகங்கள் சூடாக்கினால் விரிவடையும்; குளிர வைத்தால் சுருங்கும். அண்டிமனி என்ற உலோகம் மட்டும் குளிரவைத்தால் விரிவடையும். உலோகங்களில் பல நீரைவிடக் கனமானவை; அவை நீரில் மூழ்கும். ஆனால் பொட்டாசியம், சோடியம், விதியம் ஆகியவை நீரைவிட இலேசானவை. இவை நீரில் மிதக்கும்.

எல்லா உலோகங்களும் பூமியிலிருந்து தான் கிடைக்கின்றன. தங்கம், பிளாட்டினம் போன்ற சில உலோகங்கள் வேறு பொருள்களுடன் கலக்காமல் தனியாகக் கிடைக்கின்றன. பல உலோகங்கள் தனியாகக் கிடைப்பதில்லை. இவை ஆக்சிஜன், கந்தகம் போன்றவற்றுடன் கலந்த கூட்டுப் பொருள்களாகவே கிடைக்கின்றன. இந்தக் கூட்டுப் பொருள்களுக்குத் தாதுக்கள் (த.க.) என்று பெயர். பல வழிகளில் தாதுவிலிருந்து உலோகத்தைத் தனியாகப் பிரித்து எடுக்கலாம்.

உலோகங்கள் நமக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இவற்றால் நகைகளும், நாணயங்களும் செய்யலாம். நிக்கல், செம்பு இவற்றாலும் நாணயங்கள் செய்கிறார்கள். இரும்பினால் எந்திரக்கருவிகளும், ஆயுதங்களும் செய்யலாம். குழாய்கள் செய்யக் காரீயம் பயன்படுகிறது. செம்பினாலும் அலுமினியத்தாலும் பாத்திரங்கள் செய்யலாம். யுரேனியம், தோரியம் என்ற உலோகங்கள் அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுகின்றன.

பெரும்பாலான உலோகங்களைத் தனியாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாகத் தங்கம் எளிதில் வளையும். அதனுடன் செம்பு சேர்த்தால்தான் அது உறுதியாக இருக்கும். இவ்விதம் உலோகங்களை ஒன்றாகக் கலந்து பெற்ற பொருள்களுக்கு உலோகக் கலவைகள்(த.க.) என்று பெயர். வெண்கலம், எஃகு பித்தளை இம்மூன்றும் உலோகக் கலவைகளில் முக்கியமானவை. இக்காலத்தில் உலோகங்களைப் பற்றி ஆராய்வது ஒரு தனி விஞ்ஞானமாகவே வளர்ந்துள்ளது. இதற்கு உலோகவேலைக் கலை (Metallurgy ) என்று பெயர்.


உலோகங்கள்

  • அலுமினியம் *செம்பு பெர்க்கீலியம்

அன்டிமனி செலீனியம் பெரிலியம் ஆக்டீனியம் சோடியம் பேரியம் ஆமரிசியம் டங்ஸ்ட்டன் பொட்டாசியம் ஆர்சனிக் டான்டலம் பொலோனியம் ஆஸ்மியம் டிஸ்ப்புரோசியம் போரான் இட்டர்பியம் டெக்னீசியம் *மக்னீசியம் இட்ரியம் டெர்பியம் மாங்கனீஸ் இண்டியம் டெலூரியம் மாலிப்டினம் இரிடியம் *டைட்டேனியம் *யுரேனியம் இரும்பு *தங்கம் யூரோப்பியம் எர்பியம் தாலியம் ரினீயம் கடமியம் *துத்தநாகம் ருதீனியம் காடலினியம் தூலியம் ருபிடியம்

  • காரீயம் *தோரியம் *ரேடியம்

கால்சியம் * நிக்கல் ரோடியம் காலிபோர்னியம் நியோடிமியம் லாந்தனம் காலியம் நெப்டியூனியம் லிதியம் கியூரியம் பல்லேடியம் லுட்டீசியம் குரோமியம் *பாதரசம் வனேடியம் கொலம்பியம் பிரான்சியம் வெள்ளி கோபால்ட் பிரேசியோடிமியம் *வெள்ளீயம் சமேரியம் *பிளாட்டினம் ஜெர்மானியம் சர்க்கோனியம் பிஸ்மத் ஸ்காண்டியம் சிலிக்கன் புரோட்டாக்டீனியம் ஸ்டிரான்ஷியம் சீசியம் புரோமீதியம் ஹாப்னியம் சீரியம் புளுட்டோனியம் ஹால்மியம்

உள்ளெரி எஞ்சின் : ரெயில் எஞ்சினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் பெரிய சக்கரத்துடன் இணைந்த ஓர் இரும்புத் தண்டு முன்னும்பின்னும் நகருவது வேடிக்கையாக இருக்கும். இதற்குப் பிஸ்ட்டன் என்று பெயர். இது முன்னும் பின்னும் நகரும்போது இதனுடன் இணைத்துள்ள சக்கரமும் சுழல்கிறது; வண்டி புறப்படுகிறது. பிஸ்ட்டனை இவ்விதம் இயக்க நீராவியைப் பயன்படுத்துகிறார்கள். எஞ்சினின் மேற்பாகத்திலிருக்கும் நீண்ட உருளை வடிவமான கொதிகலத்தில் நீராவி உற்பத்தியாகிறது. சிலிண்டர் என்னும் பாகத்திற்குள் அதிக அழுத்தத்தில் நீராவியைச் செலுத்தும்போது அது அங்குள்ள பிஸ்ட்டனைத் தள்ள, பிஸ்ட்டன் இயங்குகிறது.

நீராவியை உற்பத்தி செய்வதற்கு எஞ்சினின் பின்பாகத்தில் நிலக்கரியை எப்போதும் எரித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பஸ், கார் ஆகியவற்றில் எஞ்சினை இயக்கும் முறை வேறுவிதமானது; எரிபொருள்களும் வேறு. இவற்றில், சிலிண்டர் என்ற பாகத்திற்குள்ளேயே பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்கள் எரிபொருளாக எரிக்கப்படுகின்றன. அதனால் உண்டாகும் வெப்பமான வாயு, சிலிண்டரில் உள்ள பிஸ்ட்டனைத் தள்ளி எஞ்சினை இயக்கும். இத்தகைய எஞ்சினுக்கு உள்ளெரி எஞ்சின் என்று பெயர்.