பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ப ர ன ர்

' மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை

ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காண

புனல்நயத் தாடும் அத்தி.” (அகம் டிஎசு.)

(12) ஆட்டனத்தியும், ஆதிமந்தியும் :

அக்தி என்பான், ஆற்றுப்புனலில் ஆடும் தொழிலில் வல்லதைல்பற்றி ஆட்டனத்தி என அழைக்கப்பெற்றனன். அவன் சேரநாட்டினன் ஆதிமந்தியாரின் ஆருயிர்க் கணவனுவன் ; ஆதிமந்தியார், மன்னன் கரிகால்வளவன் மகள் ஆவர்; புலவரும் போற்றும் புலமையுடையார் ; வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவரின் பாராட்டைப் பெற்ற பெரும்புலவராவர். , , , .

காவிரிஆற்றில் கழார்ப்பெருந்துறையில் ஆண்டு தோறும் புதுப்புனல் வருங்கால் பெருவிழா நிகழும் ; ஆற்றுப்புனவில் குதித்து ஆடவல்ல அங்காட்டு இளைஞர், அன்று ஒருங்கே சேர்ந்து ஆடித் திரிவர்; அவ்வாடல் காணச் சோழநாட்டு மக்களும், மன்னனும் ஆண்டு வந்து மகிழ்வர் ; ஒராண்டு நடைபெற்ற விழாவின்போது, கரி காலனுடன் ஆதிமந்தியும், ஆட்டனத்தியும் வந்திருந்தனர்; விழாக் கண்டு அகமகிழ்ந்திருந்தான்் ஆட்டனத்தி; அவ லும் ஆடவல்லவன்; ஆடவல்ல அவனுல், பிறர் ஆடுவதைப் பார்த்திருக்க இயலவில்லே போலும் அவனும் ஆட விரும்பி ன்ை; புனலாட்டிற்கேற்ற புதுமுறை ஆடையணிந்து ஆற்றில் குதித்த ஆடத் தொடங்கிவிட்டான்; அவன். ஆடல்கண்டு அனேவரும் அகம் மகிழ்ந்தனர்; அவன் ஆடல் அத்தணேச் சிறந்திருந்தது; ஆயினும் அவன் வேற்றாரி னன்; அவ்வாற்றில் அதற்குமுன் ஆடி அறியாதவன்; ஆகவே, ஆற்றின் ஆற்றலும் தன்மையும் அறிந்து ஆட அவளுல் இயலாது போயிற்று; அதனல் ஆடிக்கொண் டிருந்த அவன், ஆற்றுப்புனலால் அடித்துக்கொண்டு. போகப்பட்டான்.