பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ப ர ன ர்

துப் போரிடத்தக்க பெரும்பகை எதையும், இங்கிலவுலகில் காணமாட்டாமையால், செங்குட்டுவன் தோள்கள் தினவு கொள்ளலாயின ; ஆகவே அவன், தன் தோள் பூரிக்கப் போர்புரியவேண்டும் என்ற வேட்கையையே காரணமா கக் கடலேவளேத்துப் போரிட்டான் ; உயர்ந்து எழுந்து விழும் அலைகளையுடைய அக்கடல்நீர், அவன் ஆற்றலுக் குத் தோற்றுப் பின்னிடுமாறு ஒட்டிப் பெருமையாற் சிறந் தது அவன் கைவேல் :

' குட்டுவன், பொருமுரண் பெரு அது

விலங்கு சினம் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஒங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம்.”

(பதிற்று சக, சடு, சசு, சஅ; அகம்: உகஉ.)

செங்குட்டுவன் செய்த போர்களுள், மோகூர்ப் பழையைேடு அவன் ஆற்றிய போர் ஒன்றே, பாணரால் பெரிதும் விளங்க உரைக்கப்பட்டுளது ; செங்குட்டுவன் செய்துள்ள போர்களில், இப் பழையைேடு செய்த போர் தான்் மிக வீரம் சிறந்த போர் என்றும் கொள்ளலாம். ஆகவே, அப்போரின் காரணத்தையும், அப்போர் சிகழ்ச்சி களையும், அப்போரின் பின் விளைவுகளையும், பாணர், விரி வாக உரைத்துள்ளார். ' அறுகை, என் நண்பன் சேய் மைக்கண் வாழ்பவனே ஆயினும், அவன் என் சிறந்த நண்பனே ஆவன்.” என்று பலரும் அறியக்கூறி, அவ் அறுகை, மோகூர் மன்னனுக்கு அஞ்சித் தன் நாட்டினின் றும் நீங்கி ஒடி மறைந்து வாழும் பழியினே ஒழித்தற் பொருட்டு, மேரீகூர் அரண்களைத் தகர்த்து, நகருள் துழைந்து, அவனது வெற்றிமுரசினேக் கைப்பற்றி, அவன் காவல் மாமான வேம்பினே வெட்டி வீழ்த்தி, போர் முரசு செய்துகொள்ளும் வண்ணம் அதைச் சிறுசிறு துண்டங்க ளாகச் செய்து வண்டிகளில் ஏற்றிக் களிறு பல பூட்டித் தன்னடு திரும்பினன்.