பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

絮2 மாகப் புலவர்கள்

புறநானூற்றில் இடம் பெற்றுள்ள புலவரின் மற்றொரு செய்யுட்கண், புலவர் கிலேயாமை கூறி, அறன் அறிவுறுத்தும் முறை மிகமிக அழகாக அமைந்துள்ளது. கடல்சூழ்ந்த இப் பேருலகினே, இடையே, உடைவேல மரத்தின் இலையளவு சிற்றிடமும் பிறர்க்கு உரியதன்று எனப் போற்றிப் புகழுமாறு தாமே ஆண்ட பேரரசர் மிக மிகப் பலராம் ; கடல்ஆலே கொழிக்கக் குவிந்த மணலே. எண்ணிக் காணினும், அவ்வாறு உலகாண்ட உயர்ந்தோர் தொகையின் எண்ணிக் காணல் இயலாது; அவ்வாறு ஆண்ட அவர்களும் மாளாது வாழ்ந்தாரல்லர் தாம் ஆண்ட தமக்குரிய அந்நாட்டைத் தமக்குப் பின்னே பிறர் பற்றி ஆளுமாறு கைவிட்டு மாண்டு மறைந்தே போயினர் ; வேந்தன்தம் கிலேமையே அஃது எனின், ஏனே யோர் தம் கிலேமையினே எடுத்துக் கூறலோ வேண்டுவ தின்று அவரெல்லாம் இறத்தல் உண்ம்ை. இது பொய் யுரையன்று இறப்பு எப்போது வரும் என அறிந்து கூறுவார் உலகத்தில் ஒருவரும் இலர் அஃது எந்தக் கணத்தினும் வந்துறும். ஆதலின், அது வாதமுன்னரே, தம் எதிர்கால வாழ்விற்காம் நல்வினயினே முடித்து விடுதல் மூதறிவுடைமையாம்; ஆகவே, அந்நாள் வாரா முன்னரே, துறவுநெறி பூண்டு திவமேற் கொள்க! என அவர் கூறும் அறிவுரையினே உளங்கொண்டு உய்வோமாக!

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கன் மாநிலம் உடைஇலே கடுவனது இடைபிறர்க் கின்றித் தாமே ஆண்ட ஏமங் காவலர், இடுதிரை மணலிலும் பலரே ; ஈடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் - காடு பிறர்கொளச் சென்றும்ாய்க் தனரே அதல்ை, கீயும் கேண்ம்தியத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை ; ` மடங்கல் உண்மை ; மாயமோ அன்றே ; இன்ன வைகல் வார முன்னே செய், முன்னிய வினேயே,

  1. ಎÇäå#g-fಖ535.” (gpà: ೩}