பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ0. ஒக்கூர் மாசாத்தனுர்

சோழ நாடு, பாண்டி நாடு ஆகிய இரு நாடுகளிலும் இப் பெயருடைய ஊர்கள் பல இருத்தலின், மாசாத்தனர். பிறந்த ஒக்கூர் யாண்டுளது என்பதைத் துணிந்து கூறுதற் கில்லை; இவ்வூர் புலவர் பலர் வாழ்ந்த பெருமையுடைய தாம் ; மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவரொருவர் இவ்வூரிற் பிறந்து பெருமையுற்றுளார். .

கணவனோடு கலந்துறையும் இளமைக் காலத்தே அல்லித் தழையாலாய ஆடை உடுத்து அழகுமிக்கு வாழ்க் தாளொருத்தி, கணவன் இறந்தபின்னர்த், தனக்கு ஆடைக்காம் அழகிய தழை அளித்த ஆம்பல் உண்ணுதற் காம் புல்லரிசி அளித்துத் துணைபுரியும் கொடுங்காட்சி யினேக் கண்டு கண்ணிர்விடும் தாபதகிலேயினேப் புலவர் ஒக்கூர் மாசாத்தனர். நன்கு விளங்கப் பாடியுள்ளார்.

'அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

இளைய மாகத் தழையா யினவே . இனியே. பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது தின்கு வைக லுண்ணும் (மறுத் அல்லிப் படு உம் புல்லா யினவே,' (புறம் : உச.அ) காலேயில் காடுசென்று, அறுகம்புல்லாம் கல்லுண வுண்டு, மடிகிறையப் பால்கொண்டு, தம் கன்றுகளே கினேயும், அழைக்கும் அம்மா எனும் ஒலியோடு விடுகோக்கி ஓடிவரும் கறவைகளேக் கண்டாளொருத்தி, பொருள் கருதிப் பிரிந்த தலைமகன் வாராமையால் வருந்தித், தம் தொழில் முடிந்தவுடன் விரைந்து விடு திரும்புதல்வேண் டும் எனக் கறவைகளும் எண்ணுகின்றன. ஆனல் கம் தலைவர்க்கு அக் கருத்தில்லையோ எனக் கலங்கும் காட்சி யினேயும், அவளுக்கு யாதும் கூறமாட்டாமையால், தன்கை யாழிசைத்து, அவள் துயர்திரக் கடவுளேப் பரவுவான் போல் ஆண்டிருந்து மீண்டுசெல்லும் பாணன் செய்கை யினையும் புலவர் ஒருங்கே பாடி மகிழ்கிருர்,