பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s:60 மாநகர்ப் புலவர்கள்

ஒரு பொருள் இருப்பதாக எண்ணியவுடனே அக்காமத் தால் துயர்உறுதல் போன்று தளர்வுற்று மெலிவர்; ஆகவே, நண்ப ! காமம் என்பதொன்.அறு உலகில் இல்லை; எல்லாம் அவரவர் கருத்தின் திரிபே ஆதலின், கலங்கா உளம் உடையையாயின், அக்காமத்தால் அயர்உறல் .கின்பால் உண்டாகாது," என்று கூறினன் எனப் பாடி, காமம், கருத்தின் கற்பனேயே காணக்கூடிய பொருளன்று எனக்கூறும் புலவர் பெருங்கந்தனரின் பேருரை பெரிதும் .சிந்தித்தற்குரித்தாம்.

காமம் காமம் என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே ; கினைப்பின் முதைச்சுவல் கலித்த முற்ரு இளம்புல் மூதா தைவக் தாங்கு விருந்தே காமம்; பெருந்தோளோயே!' (குறுங் : உoச) காமத்தின் இயல்பினே விளக்கிய தலைமகன், அதை விளக்கக் குளகு மேய்ந்த யானேயின் நிலையினே உவமையாக எடுத்துக்காட்டியதற்கும் ஏற்ப, அதை வேறுவகையால் விளக்கப் புகுந்த அவன் நண்பன் அதை விளக்க, முற்ருத இளம்புல்லே மேயமாட்டாத பல்லிழந்த கிழப்பசுவின் கிலையினை உவமையாக மேற்கொண்டான் எனப் பாடி ஒர் ஒற்றுமை கண்ட புலவன் புலமை நயம் வலுக்தொறும் நயம் பயந்து கிற்றல் காண்க! -

ஞாயிறு மறைய, செவ்வானம் தோன்ற, முல்லை மலர்ந்து மணங் கமழவரும் காலமே மாலையாம் என உல கோர் கூறுவர் : மாலேக்காலம் காதலரைப் பிரிந்து தனித் திருப்பார்க்குத் துயர்தரும் இயல்புடையது ; ஆகவே மர்லேக்காலம் என்பதற்குத் துயர்தரு காலம் என்றே பொருள் கொள்ளுதல்வேண்டும்; காதலரைப் பிரிந்திருப் பார்க்கு இன்பந்தரும் காலம் எதுவும் இல்லை : எக்காலமும் - அவர்க்குத் அன்பமே விடியற்காலமும் அவர்க்குத் துயர் தரு காலமாம: பகற்காலமும், அயர் தரு காலமாம் ; அவர்க்கு எல்லாக் காலமும் துயர் கரு காலமே ஆதலின்,