பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. மோசி கரையனுர்

இவர், மோசி என்ற ஊரில் பிறந்தவர் : கரையனர் எனும் இயற்பெயர் உடையவர் : இவர்க்கு இப்பெயர் வரக் காரணம் யாது என்பது புலப்படவில்லை. இவர் பாடிய பாட்டொன்று, நெடுந்தொகை மணிமிடை பவளத்தில் இடம் பெற்றுளது. இவர் கூறும் நெய்தல் கிலத்து மாலைக் காட்சி கவினுடையது. -

- ஞாயிற்று மண்டிலம் வெப்பம் தணிந்தது; மலைகள் பொன்னிறம் பெற்றன ; வண்டுகள் மலர்களேச் சுற்றி ஒலித்தன ; கடற்சோலைகளில் காரைகள் ஒலித்தன ; கரை யில் ஒடி ஆடிய ஞெண்டுகள் வளேக்குட் புகுந்தன; அலைகள் ஒய்ந்து ஒலி அடங்கின; மீன் படகுகள் தம் தொழில் ஒழிந்தன; வானம் செங்கிறம் பெற்றது ; துணையொடு கூடிய அன்றிற் பறவைகள் பனமரத்து மடலுள் புகுந்து தங்கின : மணம் நாறும் கழிமலர்கள் கூம்பின; பொழில் சூழ்ந்த மனேகளின் மன்றத்தே உள்ள புன்னேகள் பொன்னிற மலர் பூத்தன ; பகற்பொழுது சிறிது சிறி தாகக் குறைய, இரவு வந்துற்றது என அவர் கூறும் அந்திக் காலத்து அழகினே நோக்குக! -

"மண்டிலம் மழுக, மலேசிறம் கிளர,

வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக் கண்டல் கானல் குருகினம் ஒலிப்பக், கரைஆடு அலவன், அளேவயின் செறியத், திரைபாடு.அவியத் திமில் தொழில் மறப்பச். செக்கர் தோன்றத் துணைபுணர் அன்றில் எக்கர்ப் பெண்ணே அகமடல் சேரக், - கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனப் புன்னே கறுவி, ப்ொன்னிறம் கொளாஅ, - எல்லை பைப்பயக் கழிப்பி எல்உற." (அகம்: உசு)