பக்கம்:சித்தி வேழம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் இறைவன் 103 தொடங்கினள் மடல் என்று அணிமுடித் தொங்கற் புறஇதழாகிலும் அருளான்; இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்; மறத்தொழில் வார்த்தையும் உடையன்; . திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலே, மலரும் பன்னிரு நயணத்து அறுமுகத்து அமுதினே மருண்டே. (உறுதியையுடைய வைதிகர்கள் வாழும் திருவிடைக்கழி என் னும் திருத்தலத்தில் அழகிய குரா மரத்தின்கீழ் எழுந்தருளியிருக் கும் சிங்கம் போன்றவனும் மலர்ந்த பன்னிரண்டு திருவிழிகளேயும் ஆறு முகங்களேயும் உடைய அமுதம் போன்றவனுமாகிய முருகனே க் கண்டு மயங்கி மடலேறுவேன் என்று பேசத் தொடங்கிள்ை என்று அறிந்து, அப்பெருமான் தன் அழகிய திருமுடியில் அணிந்த மாலே யின் மலரில் உள்ள புற விதழையேனும் அளிக்கவில்லே, தன் இடத் திலே இருக்கும்படிக் குறமகளிடத்திலும் தலைவனாக இருப்பவன் : வேடர்களுக்குரிய மறத்தொழிலுடையவன் என்று பலர் பேசும் வார்த்தைகளேயுடையவன்.) . عمر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/109&oldid=825707" இலிருந்து மீள்விக்கப்பட்டது