பக்கம்:சித்தி வேழம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமளக் கொழுந்து அவர்கள் வாழும் இடம் திருப்பிடவூர். அன்னேயும் மகளும் அவர்கள் தோழியரும் அடிக்கடி திருவிடைக்கழி யில் எழுந்தருளியுள்ள முருகனைத் தரிசித்துக்கொண்டு வரு வார்கள். அப்படி ஒருமுறை சென்று வந்தபோதுதான் அந்த இளம்பெண் முருகன்மேற் காதல் பூண்டு மயங்கி யிருந் தாள். அதைக் கண்டு வருந்திய அவள் தாய் பலபலவாக எண்ணியும் பேசியும் தனக்கு உண்டான துயரைச் சொல்லு கிருள். திருப்பிடவூரிலும் கோயில்கள் உண்டு. குன்றிலே பொழில் வளர்ந்தால் எப்படி வளப்பத்துடன் இருக்கும்! அப்படி வளர்ந்த பொழில்கள் உண்டு. யாவரும் கண்டால் பிரமிக்கும் மாளிகைகளில் மக்கள் உறைந்தார்கள். , அங்கே வாழும் மடந்தையர் மான்போன்ற வெருண்ட பார்வையை உடையவர்கள். அவர்களுக்குமட்டும் அருள் செய்ய மாட் டேன் என்ற விரதமா முருகன் கொண்டிருக்கிருன்? இளம் பெண்ணின் அன்னே இவற்றை எண்ணிப் பார்க் கிருள். இந்த ஊரே அழகியது; இந்த ஊரிலுள்ள கோயில் அழகியது; பொழில்கள் மிகமிக அழகியன; பெண்களுடைய அழகுக்குச் சொல்லவேண்டியதே இல்லை. அவர்களின் கண் அழகே போதுமே! அவர்களுக்கு முருகன் அருள் செய்ய மாட்டான? தன்னுடைய காதலியைப் பிரிந்து பொருளே பெரிதாகக் கருதிச் செல்லும் ஆடவன் பாலே கிலத்து வழியே போவான். தன் வீட்டில் ஒவ்வொரு கணமும் தன் பிரிவைத் தாங்காமல் துடித்துக் கொண்டிருக்கும் காதலியின் துன்பத் தைச் சிறிதும் எண்ணுமல் பொருளே ஈட்டுவது கடமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/110&oldid=825709" இலிருந்து மீள்விக்கப்பட்டது